பேராசிரியர் திறனாய்வாளர் பஞ்சாங்கத்தின் ஆவண படத்தை தொடங்கி வைத்த முனைவர் சுந்தர முருகன்

புதுச்சேரியில் கடந்த 40 ஆண்டு காலமாகத் தமிழ்ப் பேராசிரியராக பணியாற்றிய  பஞ்சு என்கிற பஞ்சாங்கத்தின்  வாழ்க்கை வரலாற்றை நண்பர்கள் தோட்டம் ஆவணப்படம் எடுக்கிறது. இந்த ஆவணப் படத்தை புதுவையின் தமிழறிஞர் கலைமாமணி முனைவர் சுந்தர முருகன்,  முதலமைச்சரின் நாடாளுமன்ற செயலரின் செயலர் டாக்டர் பால்ராஜ், ஆண்டவர் அறக்கட்டளையின் நிறுவனர் பொறியாளர் முத்துராமன்,  புதுவைத் தமிழ் சங்கத்தின் துணைத் தலைவரும் நண்பர்கள் தோட்டத்தின் தலைவருமான  ப. திருநாவுக்கரசு, ‌ கவிஞர் புதுவை யுகபாரதி ஆகியோர்  ஆவணப்படப் பலகையை சொடக்கி  தொடங்கி வைத்தனர்.

பேராசிரியர் பஞ்சு இலக்கிய இல்- வாழ்க்கை என்னும் பெயரில் இயக்கப்படவுள்ள ஆவணப்படத்தைப் புதுவை யுகபாரதி இயக்குகிறார். நண்பர்கள் தோட்டம் அமைப்பானது இந்த ஆவணப் படத்தை தயாரிக்கிறது. இந்த ஆவணப்படத்தை ஆவணப்பட இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான ஆதியோகி ஒளிப்பதிவு செய்கிறார். இந்த ஆவணப் படத்தைத் தொடங்கி வைத்திருக்கிற கலைமாமணி முனைவர் சுந்தர முருகன் முனைவர் பேராசிரியர் பஞ்சாங்கத்தின் மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.