ஆகஸ்டு 1ல் திரைக்கு வருகிறது “சரண்டர்”

அப்பீட் பிக்சர்ஸ்  சார்பில், தயாரிப்பாளர் வி.ஆர்.வி. குமார் தயாரிப்பில்,  கௌதம் கணபதி இயக்கத்தில், தர்ஷன் நாயகனாக நடிக்க, காவல்துறை பின்னணியில்  உருவாகியுள்ள திரைப்படம் “சரண்டர்”.. இப்படம் ஆகஸ்டு 1 ஆம் தேதி திரைக்கு வருகிறது. இப்படத்தில்  தர்ஷன் நாயகனாக நடித்துள்ளார், பாடினி குமார் நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் மன்சூர் அலிகான், லால், சுஜித் ஷங்கர், முனிஷ் காந்த் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் இசை வெளியீடு நிகழவில்நடிகர் தர்ஷன் பேசியதாவது: “கௌதம் சாருக்கு நன்றி, அவர் எப்போதும் என்னை மிகப்பெரிய கதாநாயகன் போலதான் நடத்தினார். தயாரிப்பாளர் குமார் சார் ஒரு கதையை நம்பி, புது குழுவை  நம்பி, இவ்வளவு செலவு செய்து படம் செய்துள்ளார். அவருக்கு நன்றி. நாங்கள் படபிடிப்பில்  ரேணுவிடமும் கேட்டுக்கொள்வோம் என்று சொல்வார்கள். அவர் நாங்கள் என்ன எடுத்தாலும் பெரிதாகப் பாராட்ட மாட்டார். சரி என்றுதான் சொல்வார். எனக்கு இப்போது புதிதாக கதை சொல்ல வந்தவர்கள் அவர்தான்.******

என்னை ரெஃபர் செய்ததாகச் சொன்னார்கள் நன்றி சார். என்னை அழகாகக் காட்டிய கேமராமேனனுக்கு நன்றி. மன்சூர் அலிகான் போல ஒரு சீனியர் ஆக்டருடன் வேலை பார்த்தது மகிழ்ச்சி. அவரிடம் நிறையக் கற்றுக்கொண்டேன்.  படத்தில் எல்லோரும் கடின உழைப்பைத் தந்துள்ளனர்.  என்னை மக்களிடம் சேர்த்த பத்திரிகை நண்பர்கள் இப்படத்தையும் சேர்த்து விடுங்கள் நன்றி.

இயக்குனர் கௌதம் கணபதி பேசியதாவது…  இது எனக்கு முதல் மேடை, என் குரு அறிவழகன் சார் இங்கு வந்திருப்பது மிகப்பெரிய மகிழ்ச்சி. இப்படத்தை மிக நேர்மையாக எடுத்துள்ளோம். படத்தில் பாட்டு இல்லை, தேவைப்படவில்லை, தர்ஷனும் எனக்கு இது மாதிரி வேண்டும் என எதையுமே கேட்கவில்லை. கேமராமேன், எடிட்டர், இசை  என எல்லாமே அறிவழகன் சாரிடமிருந்து வந்தவர்கள் தான். ஒரு டீமாக எல்லோரும் உழைத்துள்ளோம். படம் மிக நேர்த்தியாக வந்துள்ளது. இப்படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி’ என்றார்.

தொழில் நுட்ப குழு விபரம். தயாரிப்பாளர்: VRV. குமார்  எழுத்து & இயக்கம் – கௌதமன் கணபதி ஒளிப்பதிவு : மெய்யேந்திரன்  இசை : விகாஸ் படிஸா  எடிட்டர்: ரேணு கோபால்  கலை இயக்குநர்: R K மனோஜ் குமார்  ஸ்டண்ட்: ஆக்‌ஷன் சந்தோஷ்  ஒலி வடிவமைப்பு: கே.பிரபாகரன் & பி.தினேஷ் குமார்  ஒலி கலவை: ஷரோன் J மனோகர் மக்கள் தொடர்பு : சதீஷ்குமார் S2 Media