சேலம் மாநகராட்சி, கொண்டலாம்பட்டி மண்டலம், வார்டு 45-க்கு உட்பட்ட பகுதிகளுக்கு சேலம் பழையபேருந்து நிலையம் அருகில் உள்ள நேரு கலையரங்கம் மற்றும் ஓமலூர் பேரூராட்சி பகுதிகளுக்கு ஓமலூர் பேரூராட்சி சமுதாயக்கூடத்திலும் நடைபெற்று வரும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை சுற்றுலாத்துறை அமைச்சர் இரா.இராஜேந்திரன் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா.பிருந்தாதேவி, முன்னிலையில் நேரில் பார்வையிட்டு ஆய்வ. மேற்கொண்டார். பின்னர் சுற்றுலாத்துறைஅமைச்சர் தெரிவித்ததாவது : “மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் “உங்களுடன் ஸ்டாலின்” திட்டம் 15.07.2025 அன்று தொடங்கி வைக்கப்பட்டதை தொடர்ந்து சேலம் மாவட்டத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் தொடங்கி நடைபெற்று வருகிறது. ”உங்களுடன் ஸ்டாலின்” என்ற திட்டத்தின் கீழ் சேலம் மாவட்டத்தில் 15.07.2025 அன்று முதல் வரும் நவம்பர் மாதம் வரை நகர்ப்புறப்பகுதிகளில் 168 முகாம்களும் மற்றும் ஊரகப் பகுதிகளில் 264 முகாம்களும் என மொத்தம் 432 சிறப்பு முகாம்கள் மூலம் பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காணப்பட உள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள கடைகோடி மக்கள் அன்றாடம் அணுகும் அரசுத்துறைகளின் சேவைகள் அவர்கள் வசிக்கும் பகுதிக்கு அருகாமையிலேயே சென்று வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். மாண்புமிகு தமிழ்நாடுமுதலமைச்சர் அவர்கள் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில்பெறப்படும் மனுக்கள் அனைத்திற்கும் 45 நாட்களுக்குள்தீர்வு காண வேண்டுமென உத்தரவிட்டுள்ளார்கள்.
சேலம் மாவட்டத்தில் நேற்றையதினம் 23.07.2025 நடைபெற்ற ”உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமில்பல்வேறு துறைகளின் சார்பில் மொத்தம் 2,366 கோரிக்கைமனுக்கள் பெறப்பட்டுள்ளன. இதுதவிர கலைஞர் மகளிர்உரிமைத் தொகை கோரிக்கை விண்ணப்பமாக மொத்தம்3,475 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
இதன் தொடர்ச்சியாக, இன்று 24.07.2025 சேலம்மாநகராட்சி, கொண்டலாம்பட்டி மண்டலம் வார்டு – 45க்குட்பட்ட பகுதிகளுக்கு சேலம் பழைய பேருந்துநிலையம், நேரு கலையரங்கத்திலும், நகர்ப்புறத்தைஒட்டியுள்ள கிராம ஊராட்சி, செட்டிச்சாவடி பகுதிகளுக்குஉட்பட்டவர்களுக்கு செட்டிச்சாவடி, மாந்தோப்பு ஊரடிமாரியம்மன் கோவில் அருகிலும், சங்ககிரி நகராட்சி வார்டு – 1, 2, 4 க்குட்பட்ட பகுதிகளுக்கு சங்ககிரி, சத்தைப்பேட்டை, வார்டு -2 சமுதாயக்கூடத்திலும், ஓமலூர் பேரூராட்சி வார்டு – 1, 2, 3, 4, 5, 6, 7-க்குட்பட்ட பகுதிகளுக்கு ஓமலூர், வார்டு10, செவ்வாய் சந்தை சாலையில் உள்ள பேரூராட்சிசமுதாயக்கூடத்திலும், காடையாம்பட்டி ஊராட்சி ஒன்றியம், டேனிஷ்பேட்டை பகுதிக்கு பெரியவடகம்பட்டி, சுப்ரமணிமஹாலிலும், சங்ககிரி ஊராட்சி ஒன்றியம், சின்னக்கவுண்டனூர் பகுதிக்கு குப்பனூர் நெடுஞ்சாலையில்உள்ள ஆ.கே.எஸ் மஹாலிலும் நடைபெற்று வருகிறது.
சேலம் மாநகராட்சி, நேரு கலையரங்கத்தில்நடைபெற்ற முகாமில் பொதுமக்கள் வழங்கிய மனுக்கள் மீதுஉடனடி நடவடிக்கை மேற்கொண்டு 102 நபர்களுக்குசொத்துவரி ஆணைகளும், 7 நபர்களுக்கு பிறப்புச்சான்றிதழ்களும், ஓமலூர் பேரூராட்சிசமுதாயக்கூடத்தில் நடைபெற்ற முகாமில் ஒருமாற்றுத்திறனாளிக்கு மூன்று சக்கர சைக்கிளும், ஒருமாற்றுத்திறனாளிக்கு காதொலி கருவியும் என மொத்தம் 111நபர்களின் மனுக்களுக்கு உடனடி தீர்வுகள் காணப்பட்டுநலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெறும்இடங்களில் நேரில் பார்வையிட்டு, பொதுமக்கள் எவ்விதசிரமமும் இன்றி தங்களது கோரிக்கை மனுக்களைவழங்கிடும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள அடிப்படைவசதிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது”. இவ்வாறு சுற்றுலாத்துறை அமைச்சர் இரா.இராஜேந்திரன் தெரிவித்தார்.
இம்முகாமில் சேலம் மாநகராட்சி மேயர் ஆ.ராமச்சந்திரன், மாநகராட்சி ஆணையர் இளங்கோவன், அம்மாபேட்டை மண்டல உதவி ஆணையர் வேடியப்பன், அம்மாப்பேட்டை மண்டலக்குழு தலைவர் கே.டி.தனசேகர்,வட்டாட்சியர்கள் பார்த்தசாரதி (சேலம்), ரவிக்குமார் (ஓமலூர்), ஓமலூர் பேரூராட்சி தலைவர் செல்வராணி ரவிச்சந்திரன், செயல் அலுவலர் சந்திரகுமார் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள. கலந்து கொண்டனர்.