சமத்துவத்தை நடைமுறைபடுத்தும் மனுஜோதி ஆசிரமம்

நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே அமைந்த மனுஜோதி ஆசிரமத்தில் ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் கடவுள் ஒருவரே என்ற கொள்கையை பக்தர்கள் 55 ஆண்டுகளாக கல்கி ஜெயந்தி விழாவாகவும், கூடாரப்பண்டிகையாகவும் கொண்டாடி வருகின்றனர்.  ஜூலை மாதம் 14-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை நடைபெற்ற இவ்விழாவில் இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். இவ்விழாவில் பக்தர்கள் தங்கள் மனைவி மக்களோடு இங்கு தங்கி செல்கின்றனர். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு சாதி, மத, மொழி வேறுபாடின்றி கலப்பு திருமணங்கள் செய்வது வழக்கம். கலப்புத் திருமணம் என்பது இல்லற வாழ்வில் இணைந்து, நன்மக்கட் பேறு பெற்று வாழ்வது மட்டுமல்ல. சமத்துவத்தை உணர்துவது என்பதற்கு மனுஜோதி ஆசிரமம் எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது.

ஸ்ரீ லஹரி கிருஷ்ணா அவர்கள் தன்னுடைய மகன்களுக்கு சாதி மத பேதமின்றி கலப்பு திருமணம் செய்து வைத்தார். அதனால் ஆசிரமத்திற்கு வரும் பக்தர்கள் நாடு, நிற, மொழி என்ற பாகுபாடின்றி திருமணம் செய்து கொள்கின்றார்கள். ஆசிரமத்தில் 23.07.2025 அன்று 6 ஜோடிகளுக்கு கலப்பு திருமணங்கள் நடைபெற்றது. தாமிரபரணி நதிக்கரையில் வசிக்கும் இந்திய குடிமகன் அமெரிக்காவிற்கு மருமகனாக போகிறான். ஜாதி, மதம், நாடு, மொழி இவற்றையெல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ளாத ஒரு புதிய சமூகத்தை மனுஜோதி ஆசிரமம் உருவாக்கி வருகிறது.

இரண்டு வெவ்வேறு சமூகத்தில் வாழும் குடும்பத்தினர் ஏற்றத் தாழ்வுகளை மறந்து அனைவரும் சமம் என்கிற சூழழுக்கு தங்களைத் தாங்களே ஒருங்கிணைத்துக் கொள்ளுகிறார்கள். சமூதாயத்தில் இறை பயத்துடன் வாழ்வது மற்றும் அறத்தோடு எவ்வாறு வாழ்வது என்பதை மனுஜோதி ஆசிரமம் மக்களுக்கு போதிக்கிறது. இதை நடைமுறை வாழ்க்கையிலும் கடைப்பிடிக்கிறது. இதனால் பரந்த மனப்பான்மை உடையவர்களாக இருக்கின்றனர்.

கலப்புத் திருமணத்தினால் பெரும்பாலான தம்பதிகளுக்கு வரதட்சணை பிரச்சனை என்பது அறவே இல்லாமல் போகிறது. பெண் வீட்டாருக்கும் பொருளாதார சுமை குறைகிறது. கலப்புத் திருமணம் செய்கிற தம்பதிகளுக்கு பிறக்கும் குழந்தைகள் நல்ல ஆரோக்கியமான உடலையும், சிறந்த அறிவாற்றலையும் பெற்றுக் கொள்வதாகவும் பல முறை மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் தெரிய வந்திருக்கின்றன.