தமிழ் சினிமாவில் நடிகர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர், பாடகர் என பன்முக ஆற்றல் பெற்ற ஜி.வி.பிரகாஷ்குமார் இசைக்கு ஏற்கனவே “சூரரைப் போற்று” படத்திற்காக தேசிய விருது வழங்கப்பட்டது. இப்போது இரண்டாம் முறையாக “வாத்தி” படத்திற்காக சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய விருது பெற்ற ஜி.வி.பிரகாஷ்குமாரை சந்தித்து தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் மனதார பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்கள். .சங்க செயலாளர் கோடங்கி ஆபிரகாம் சால்வை அணிவிக்க, வாழ்த்து கடிதத்தை சங்க தலைவர் கவிதா வழங்கினார்.******
தமிழ் சினிமாவில் தன் முதல் படத்திலேயே 3 தேசிய விருதுகளை அள்ளிக் கொண்டு ரசிகர்கள் மனசில் தன்னை “பார்க்”கிங் செய்து கொண்ட ”பார்க்கிங்” இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணனையும் தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் மனதார பாராட்டி வாழ்த்தியது. . அதேபோல ”பார்க்கிங்” படத்தை தயாரித்த சோல்ஜர்ஸ் ஃபேக்டரி & பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனத்திற்கும் சிறப்பு வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்கள். எப்போதும் சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்து தன் நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து வரும் எம்.எஸ்.பாஸ்கருக்கும் சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டிருப்பதை தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் மகிழ்ச்சியோடு வரவேற்று மனதார பாராட்டியது