கிளாம்பாக்கம் காவல் நிலையம் செங்கல்பட்டு மாவட்டம், கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில், சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் 18.26 கோடி ரூபாய் செலவில் 30,000 சதுர அடி கட்டிட பரப்பளவில் தரை மற்றும் மூன்று தளங்களுடன் கட்டப்பட்டுள்ள கிளாம்பாக்கம் காவல் நிலையத்தை தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்தார்.

இக்காவல் நிலையக் கட்டடம், காவல் உதவி ஆணையர் மற்றும் ஆய்வாளர்கள் அறை, கட்டுபாட்டு அறை, கண்காணிப்பு அறை, கைதிகள் அறை, உணவருந்தும் அறை, ஆடவர் மற்றும் மகளிர் ஓய்வு அறை, பொது மக்கள் கலந்தாய்வு கூடம், காத்திருப்புக் கூடம், இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடம் போன்ற பல்வேறு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. இப்பேருந்து முனையத்தில் தினசரி 2500 பேருந்துகள் இயக்கப்பட்டு, சாதாரண நாட்களில் 50,000 பயணிகளும், விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் சுமார் 2 லட்சம் பயணிகளும் பயன்படுத்துகின்றனர். பயணிகள் மற்றும் பொது மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் இக்காவல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கூடுதல் பள்ளிக் கட்டடம் பெரம்பூர், மார்க்கெட் தெருவில் உள்ள சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சிங்கார சென்னை 2.0 மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி மூலதன நிதியின் கீழ், 9.74 கோடி ரூபாய் செலவில் 24,000 சதுர அடி பரப்பளவில் தரை மற்றும் மூன்று தளங்களுடன் கட்டப்பட்டுள்ள கூடுதல் பள்ளிக் கட்டடத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்து, வகுப்பறைகள், ஆய்வுக்கூடம், கழிப்பறைகள் போன்றவற்றை பார்வையிட்டார். மேலும், வகுப்பறைக்கு நேரில் சென்று மாணவியர்களுடன் கலந்துரையாடினார். இக்கூடுதல் பள்ளிக் கட்டடத்தின் தரைத்தளத்தில் 3 வகுப்பறைகள், ஆய்வகம்,தலைமையாசிரியர், ஆசிரியர்கள் மற்றும் அலுவலக அறைகள், முதல் மற்றும் இரண்டாம் தளத்தில் தலா 6 வகுப்பறைகள் மற்றும் ஆய்வக அறை, மூன்றாம் தளத்தில் 3 வகுப்பறைகள், கலையரங்கம் ஆகியவற்றுடன் கூடிய இணைப்புக் கட்டடம் ஆகியவை
கட்டப்பட்டுள்ளது.