“சொட்ட சொட்ட நனையுது” திரைப்படம் ஆக.22ல் வெளியீடு

அட்லர் எண்டர்டெய்மெண்ட் தயாரிப்பில்,  நவீத் எஸ்.ஃபரீத் இயக்கத்தில், நிஷாந்த் ரூஷோ, வர்ஷிணி, ஷாலினி நடிப்பில், இன்றைய தலைமுறையின் கதையில், கலக்கலான நகைச்சுவை பொழுதுபோக்கு படமாக உருவாகியுள்ள திரைப்படம் “சொட்ட சொட்ட நனையுது”. இத்திரைப்படம் ஆக.22ல் வெளிவருகிறது. நடிகர் நிஷாந்த் ரூஷோ பேசியதாவது: இப்படம் எனது ஐந்தாவது படம்.  இந்தக்கதையைக் கேட்டவுடன் சொட்டையை வைத்து ஒரு கதை, எப்படி அந்த வலியைச் சொல்ல முடியும் என்று தோன்றியது. இயக்குநர் நவீத் நிஜ வாழ்க்கையில் சொட்டையாய் இருப்பவர்களைப் பார்க்கச் சொன்னார். என் உறவுகளில் அப்படி சிலரைச் சந்தித்தபோது தான் அவர்களது வலி புரிந்தது. அப்போது தான் கதையின் வலிமை புரிந்தது. சொட்டை என்பது இயற்கை தான் ஆனால் அதைக் குறையாகச் சொல்லி,  இப்போது அது அவர்களது வாழ்க்கையையே பாதிக்கிறது. எங்கள் படம் பார்த்தால், சொட்டைத்தலையை இனிமேல் யாரும் மோசமாக நடத்த மாட்டார்கள்.******

இப்படம் உங்கள் மனதை மாற்றும். இப்படத்தில் கூட நடித்த அனைவரும் மிகச்சிறப்பாகச் செய்துள்ளனர். படத்தில் கேமராமேன், எடிட்டர், மியூசிக் டைரக்டர் எல்லோரும் முழு உழைப்பைத் தந்துள்ளார்கள். அனைவருக்கும் நன்றி. படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.

Adler Entertainment  சார்பில் அசார் பேசியதாவது… நானும் நவீத்தும் தியேட்டர், தியேட்டராக  படம் பார்க்க அலைந்திருக்கிறோம். அவன் கதை சொல்வான், நான் எழுதுவேன். அவன் 10 வருட கனவு இப்போது தான் நனவாகியுள்ளது. இது மிகப்பெரிய பயணம். நிஷாந்தை எனக்கு 6 வருடங்களாகத் தெரியும். எங்களிடம் இருந்த மொத்த பணத்தையும் உழைப்பையும் போட்டு இப்படத்தை எடுத்துள்ளோம். அடுத்து ஒரு பெரிய திட்டம் வைத்துள்ளோம். அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி.

இயக்குநர் நவீத் S ஃபரீத் பேசியதாவது…  இது எனக்கு முதல் மேடை பதட்டமாக உள்ளது. யார்க்கர் என ஒரு படம் எடுக்கலாம் என்று தான் முதலில் ஆரம்பித்தோம், ஆனால் அதற்க்கான ஃபண்ட் கிடைக்கவில்லை. அதனால் முதலில் ஒரு காமெடி படம் செய்யலாம் என நினைத்தோம். Adler எங்கள் கம்பெனி தான் அதில் பல பிஸினஸ் செய்து வருகிறோம், படம் செய்யத்தான் அந்த கம்பெனியே நடத்தி வருகிறோம். இப்போதைக்கு ஒரு படம் பண்ணலாம் என ஆரம்பித்து இந்தப்படம் வந்துள்ளது. 10 நாள் ஷீட்டிங் நடத்த தான்  எங்களிடம் இருந்தது, அதை வைத்து தான் படம் எடுத்தோம். 18 நாளில் இந்தப்படத்தை முடித்தோம். அப்பாவை நடிக்க வைத்து அவரிடம் பணம் வாங்கி படத்தை எடுத்தோம். அம்மா நகையையும் அடகு வைத்து விட்டேன். Generous Entitlement டீசர் நன்றாக இருக்கிறது என்று சொன்னார்கள் உடனே அவர்களை படத்தை ரிலீஸ் செய்ய வைத்து விட்டோம். நிஷாந்தை ஓகே செய்து விட்டு தான் கதை எழுதினோம். படத்தை முடித்து விட்டோம். ரோபோ அண்ணன் 4 நாள்  ஷீட் வந்தார் எங்களுக்காக நடித்து தந்துள்ளார். ஷாலினி நல்ல எதிர்காலம் இருக்கிறது. வர்ஷிணி ஏற்கனவே 4 படம் கமிட்டாகிவிட்டார். ரெஞ்சித் உன்னி படம் எடுக்கும் முன்னாலேயே 4 பாடல் போட்டு தந்துவிட்டார். கேமராமேன் ரயீஷ் கடைசியாகத் தான் வந்தார். முழு ஆதரவாக இருந்தார். படத்தில் எல்லோரும் பணத்தை யோசிக்காமல் உழைத்தார்கள். எல்லோருக்கும் நன்றி. நல்ல படம் எடுத்துள்ளோம் அனைவரும் ஆதரவு தாருங்கள். நன்றி.