தாம்பரத்தில் டிஜிட்டல் மோசடியை தாம்பரம் மாநகர காவல் துறையின் இணைய வழி குற்றப்பிரிவு போலிசார் கண்டறிந்து கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட நபர் சரோஜா என்பவருக்கு தடை செய்யபட்ட பொருட்கள் உள்ள பார்சல் வந்திருப்பதாக கூறி வாட்ஸ்அப் கால் மூலம் தொடர்பு கொண்ட மோசடி நபர் தன்னை ீபோலீஸ்” எனக்கூறி பாதிக்கப்பட்ட நபரை ஆர்.பி.ஐ.சட்டப்படி கைது செய்வதாக கூறி தங்களிடம் உள்ள பணத்தை சோதனை செய்ய வேண்டும் எனக்கூறியும் தான் கூறும் வங்கி கணக்குக்கு பணத்தை அனுப்புமாறு கூறியதை நம்பி பாதிக்கப்பட்ட நபர் ரூ.1.24 கோடி இழந்துள்ளார்.
மேலும் பாதிக்கப்பட்ட நபர் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த தாம்பரம் மாநகர காவல் துறையின் இணைய வழி குற்றப்பிரிவு போலிசார் விசாரணை நடத்தி வந்தனர். மேலும் விசாரணையில் ரூ.40 லட்சம் ரூபாய் பணம் வங்கி கணக்கு ஒன்றுக்கு சென்றுள்ளதை உறுதிபடுத்திய போலிசார் மேலும் அக்கணக்கு ஒடிசாவை சேர்ந்த 1) தாவத் பிரவீன் குமார் மற்றும் 2) மல்லவரப்பு ரமேஸ் என்பவர்கள் இணைந்து பயன்படுத்தியது தெரியவந்தது. இவர்களை பிடிக்க தனிப்படை போலிசார் ஒடிசா விரைந்தது. 20.08.2025 அன்று 1) தாவத் பிரவீன் குமார் மற்றும் 2) ஆகாஸ் மோகன்டி (மல்லவரப்பு ரமேக்ஷ் என்பவருடன் தொடர்பில் இருந்தவர்) இருவரும் கைது செய்யப்பட்டு பின்னர் அவர்களை தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு 06.09.2025 வரை நீதிமன்ற காவலில் வைக்க புழல் சிறைக்கு அனுப்பப்பட்டனர். தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அபின் தினேஸ் மொடக இந்ந விசாரணை குழுவினை பாராட்டி பொது மக்கள் யாரும் போலி வேலை வாய்ப்பு ஆன்லைன் முதலீடு மற்றும் டிஜிட்டல் கைது போன்ற மோசடி நபர்களிடம் இருந்து கவனமாக இருக்க வேண்டும் எனக் கேட்டு கொண்டார்.