“கமாண்டோவின் லவ் ஸ்டோரி” படப்பிடிப்பு நிறைவு பெற்றது

“கமாண்டோவின் லவ் ஸ்டோரி” படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது. இறுதி நாளன்று படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர்! தயாரிப்பாளர் அனுராதா அன்பரசு அனைவருக்கும் பிரியாணி விருந்து பரிமாறினார்! கதையின் நாயகனும், இயக்குனருமான வீர அன்பரசு, படப்பிடிப்புக்கு ஒத்துழைத்த நடிகர் நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரையும் பாராட்டி, பரிசளித்து, நன்றி தெரிவித்தார்!  சமீபத்தில், கங்கை அமரன் இசைக்கரங்களால் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது! கார்த்திக் ராஜா இசையமைத்துள்ள இந்தப் படத்தின் பாடல்கள் விரைவில் பிரமாண்டமாக வெளியாக உள்ளது.