கீர்த்தி சுரேஷ், மிஷ்கின் நடிக்கும் “கோர்ட் ரூம்” திரைப்படம், பூஜையுடன் துவங்கியது

ஜீ ஸ்டுடியோஸ் ட்ரம்ஸ்ட்ரிக் புரெடெக்‌ஷன்  சார்பில், வெடிக்காரன்பட்டி  சக்திவேல் மற்றும்  உமேஷ் குமார் பன்சால் தயாரிப்பில், எஸ்.விஜய் இயக்கத்தில், கீர்த்தி சுரேஷ் மற்றும் மிஷ்கின் நடிப்பில் உருவாகும் புதிய படத்தின் பூஜை நடைபெற்றது.  கோர்ட் ரூம் டிராமாவாக  இப்படத்தை உருவாக்குகிறார் அறிமுக இயக்குநர் பிரவீன் எஸ். விஜய். இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்க, அவருடன் எதிர் வழக்கறிஞராக மிஷ்கின் இணைந்து நடிக்கிறார். இவர்களுடன் ஹார்ட்பீட் சாருகேஷ், பாலசரவணன், பாலாஜி சக்திவேல், ஆர். சுந்தர்ராஜன், மாலா பார்வதி, தீபா, வெங்கடேஷ், ஸ்டில்ஸ் பாண்டியன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் இணைந்து நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் கோயம்புத்தூரில் ஒரே கட்டமாக நடத்தி முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.*******

தொழில்நுட்பக் குழு விபரம் தயாரிப்பு – Drumsticks Productions & Zee studios தயாரிப்பாளர்கள் – உமேஷ் குமார் பன்சால் மற்றும் வெடிக்காரன்பட்டி S சக்திவேல் இணை தயாரிப்பு – அக்‌ஷய் கெஜ்ரிவால், விவேக் சந்தர் M கிரியேட்டிவ் புரொடியூசர் – வினோத் CJ எழுத்து – இயக்கம் : பிரவீன் S விஜய் ஓளிப்பதிவு : அருள் வின்சென்ட் இசை: சாம் C S எடிட்டர்: பிரசன்னா G.K கலை இயக்கம் : குளித்துறை ரவீஸ் ஆடை வடிவமைப்பாளர்: ஸ்ருதி மஞ்சரி ஆடை வடிவமைப்பு : கார்த்திக் தமிழ்வாணன் ஒப்பனை : ராகவன் விளம்பர வடிவமைப்புகள் : தினேஷ் அசோக் நிர்வாக மேலாளர் : மணி தாமோதரன் தயாரிப்பு மேலாளர் : V.R.ராம் பரத் மக்கள் தொடர்பு : சதீஷ் (AIM) ஸ்டில்ஸ் : K சந்திர மோகன்