ஜி. எஸ். ஆர்ட்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜி. அருள்குமார் தயாரிப்பில், அர்ஜுன்- ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில், தினேஷ் லெட்சுமணன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘தீயவர் குலை நடுங்க’ திரைப்படத்தின் காணொளி வெளியிடப்பட்டது. முன்னணி இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ், இப்படத்தின் காணொளியை சமூக வலைத்தளம் வழியே வெளியிட்டு படக்குழுவை வாழ்த்தியுள்ளார். சட்டத்தை தாண்டி நியாயம் இருக்கும், நியாயத்தை தாண்டி தர்மம் இருக்கும், ஆனால் இறுதியில் தர்மமே ஜெயிக்கும் என்பதை மையப்படுத்தும் இந்த படத்தின் காணொளி, அர்ஜூனின் விஸ்வரூபத்தையும, மென்மையான ஐஸ்வர்யா ராஜேஷின் மர்மமிகு கதாபாத்திரத்தையும் அழகாக வெளிப்படுத்துவதோடு, ஒரு விசாரணையை பரபர காட்சிகளுடன், படத்தைப் பார்க்கும் ஆவலைத் தூண்டுகிறது. *******
வெளியான வேகத்தில் இந்த டீசர் இணையம் முழுக்க ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. ‘ஆக்சன் கிங்’ அர்ஜுன், ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில், ‘பிக் பாஸ்’ அபிராமி, ராம்குமார், ஜி. கே. ரெட்டி, லோகு, எழுத்தாளரும், நடிகருமான வேல.ராமமூர்த்தி, பி எல் தேனப்பன், தங்கதுரை, பிராங்க் ஸ்டார் ராகுல், ஒ. ஏ. கே. சுந்தர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சரவணன் அபிமன்யு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு பரத் ஆசிவகன் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை லாரன்ஸ் கிஷோர் மேற்கொள்ள, கலை இயக்கத்தை அருண்சங்கர் துரை கவனித்திருக்கிறார். அர்ஜுன் – ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்முதலாக இணைந்திருப்பதால் இப்படத்திற்கு பார்வையாளர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. தற்போது டீசர் பெரும். வரவேற்பைப் பெற்றுவரும் நிலையில், படத்தை திரைக்கு கொண்டுவரும் பணிகளில் படக்குழு பரபரப்பாக இயங்கி வருகிறது. விரைவில் இப்படத்தின் இசை, டிரெய்லர் மற்றும் திரையரங்கு வெளியீடு குறித்த அறிவிப்பு, அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.இப்படம் தமிழ், தெலுங்கு மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.