தாம்பரம் மாநகர காவல் ஆணையகரத்தின் கீழ் இரண்டு புதிய காவல் நிலையங்கள் – அமைச்சர் தா.மோ.அன்பரசன் தொடங்கி வைத்தார்.

தாம்பரம் மாநகர காவல் ஆணையரகத்தின் கீழ் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள திருமுடிவாக்கம் மற்றும் படப்பை காவல் நிலையங்களை  சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன்  திறந்து வைத்தார். மக்கள் தொகை பெருக்கம் மற்றும் நகரமயமாதலை கருத்தில் கொண்டு, குன்றத்தூர் மற்றும் மணிமங்கலம் காவல் நிலையங்களின் எல்லைகளை மறுசீரமைத்து, இந்த இரண்டு புதிய காவல் நிலையங்களும் நிறுவப்பட்டுள்ளன. இதன் மூலம், இப்பகுதிகளில் சட்டம்- ஒழுங்கை மேம்படுத்துதல், குற்றங்களைத் தடுத்தல் மற்றும் பொதுமக்களுக்கு விரைவான சேவைகளை வழங்குதல் மற்றும் வணிக நிறுவனங்களுக்கும்  பாதுகாப்பையும், நம்பிக்கையையும் மேம்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில், செல்வபெருந்தகை, எம்.எல்.ஏ., அபின் தினேஷ் மோதக், இ.கா.ப., காவல் ஆணையாளர், தாம்பரம் மாநகர காவல் மற்றும் மகேஸ்வரி, இ.கா.ப., கூடுதல் காவல் ஆணையாளர், தாம்பரம் மாநகர காவல் ஆகியோர் கலந்துகொண்டு, இந்த புதிய காவல் நிலையங்கள், காவல் துறையின் செயல்திறனை மேலும் உயர்த்தி, மக்கள் சேவையை மேம்படுத்தும் எனத் தெரிவித்தனர்.