“மருதம்” திரைப்பட விமர்சனம்

சி.வென்கடேசன் தயாரிப்பில் வி.கஜேந்திரன் இயக்கத்தில் விதார்த், ரக்‌ஷனா, அருள்தாஸ், மாறன், நாகராஜ், சரவண சுப்பையா ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “மருதம்”. ராணிப்பேட்டை அருகேயுள்ள இயற்கை சூழ்ந்த ஒரு கிராமத்தில் விதார்த் தனது மனைவி ரக்‌ஷனா மற்றும் 5யயது மகனுடன் தனது காணி நிலத்தில் விவசாயம் செய்து சந்தோஷமாக குடும்பம் நடத்தி வருகிறார். தனது மகனை வசதியான ஆங்கிலவழி பாடசாலையில் படிக்க வைக்க அருள்தாசிடம் ரூ.3லட்சம் கடன்வாங்கி அப்பாடசாலைக்கு நன்கொடை கொடுத்து மகனை சேர்த்துவிடுகிறார் விதார்த். இந்நிலையில் திடீரென தன விவசாய நிலத்தில் சிலர் கம்பி வேலி போடுவதை பார்க்கிறார். அதனால் அவர்களுடன் சண்டை போடுகிறார். இந்த நிலத்தின் மீது உங்கள் தந்தை வங்கியில் வாங்கிய கடனுக்காக வங்கி இந்த நிலத்தை ஏலம் விட்டார்கள். அந்த ஏலத்தொகையை நாங்கள் கட்டி வேலிபோடுகிறாம் என்று வேலிபோட வந்தவர்கள் கூறுகிறார்கள். என் தந்தை எனக்குத் தெரியாமல் நிச்சையமாக கடன் வான்கியிருக்க மாட்டார் என்று விதார்த் கூறிவிட்டு, அந்த வங்கிக்குச் சென்று மேலாளரிடம் விவரம் கேட்கிறார். மேலாளரும் உங்கள் தந்தை வாங்கிய கடனுக்காகத்தான் நிலத்தை ஏலம் விட்டோம் எனக்கூறி அதற்கான ஆதார பத்திரங்களையும் காட்டுகிறார். இந்த கடன் பத்திரங்கள் போலியானவை பெரும் மோசடி நடந்திருக்கிறது என கூறிவிட்டு நீதிமன்றத்தில் வங்கியின் மீது வழக்கு தொடுக்கிறார் விதார்த். வங்கியின் வழக்க்றிஞரும் விதார்த்தும் நீதிபதியின் முன் வாதிடுகிறார்கள். முடிவு என்னானது? விதார்த் தன் நிலத்தை மீட்டாரா? இல்லையா? என்பதுதான் கதை. இது ஒரு திரைப்படம் மட்டுமல்ல. அதிநவீன தொழிற்நுட்பத்தின் மூலம் நடந்துவரும் நில மோசடிகளிலிருந்து பொதுமக்கள் தங்களது சொத்துக்களை பாதுகாத்துக் கொள்ளும் விழிப்புணர்வு பாடம் என்றுதான் சொல்ல வேண்டும். சிறிதும் அச்சமின்றி ஏழை எளியவர்களின் நலனுக்காகவே இப்படத்தை இயக்கியுள்ளார் வி.கஜேந்திரன். விதார்த்  தனது எதார்த்தமான நடிப்பை திரை முழுவதும் படரவிட்டிருக்கிறார். தனது கதாபாத்திரத்திற்கு உயிரோட்டம் கொடுத்து நடித்திருக்கிறார் விதார்த். (சபாஷ் விதார்த்). ரக்‌ஷனாவின் நடிப்பு ரசிக்க வைக்கிறது. லொள்ளு சபா மனோகரின் நகைச்சுவை மனைவியால் விரட்டிவிட்டப்பட்ட கணவன்மார்களுக்கு சமர்ப்பனம். இயற்கையின் அழகை படம்பிடித்த அருள் கே.சோமசுந்தரதின் கைகளில் மண்வாசனை மணக்கிறது. பார்வையாளர்களுக்கு சலிப்புத்தட்டாமல் படத்தை ஓட்டியிருக்கிறார் படத்தொகுப்பாளர் பி.சந்துரு. மோசடிகளுக்கு வேட்டு வைத்த படம் “மருதம்”.