‘மாஸ்க்’ திரைப்படத்தின் இணையதள உரிமையை ஜீ5 கைப்பற்றியது

‘தி ஷோ மஸ்ட் கோ ஆன் புரொடக்ஷன் கம்பனி’ மற்றும் ‘பிளாக் மெட்ராஸ் ஃபிலிம்ஸ்’ இணைந்து தயாரிக்கும் ‘மாஸ்க்’ திரைப்படம் ஒரு டார்க் அதிர்வூட்டும் நகைச்சுவை படமாக  உருவாகியுள்ளது. இப்படத்தை விகர்ணன் அசோக் இயக்கியுள்ளார். கவின்  கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக ருஹானி சர்மா நடிக்கிறார் இவர்களுடன்  ஆண்ட்ரியா ஜெரமையா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த படம், 2025ல் வெளியாக உள்ளது*********.

இன்னிசை திருவிழா தீபாவளியை முன்னிட்டு, படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்த சிறப்பு போஸ்டரை வெளியிட்டு, படத்தின் OTT உரிமையை ZEE5 நிறுவனம் கைப்பற்றியதையும், ஆடியோ உரிமையை டி-சீரிஸ் பெற்றதையும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.  கவின், தனது பல்வேறு நடிப்பால் மீண்டும் ரசிகர்களை கவரவுள்ளார். அவருடன் ஆண்ட்ரியா ஜெரமையா இணைந்து நடித்துள்ளார். மேலும் ருஹாணி ஷர்மா, சார்லி, ரமேஷ் திலக், கல்லூரி வினோத்,  அர்ச்சனா சந்தோக் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.  தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் இப்படத்திற்காக இசையமைத்துள்ளார். சமீபத்தில் வெளியான முதல் சிங்கிள் ‘கண்ணுமுழி’, அதில்  உற்சாகமான நாட்டுப்புறத் தாளத்தாலும் இனிமையான பாடலாக  ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.  இத்திரைப்படத்தை இயக்கியுள்ள விகர்ணன் அசோக், தமிழ் திரையுலகின் விமர்சக பாராட்டைப் பெற்ற இயக்குநர் வெற்றி மாறன் அவர்களின் வழிகாட்டுதலில் (mentorship) இந்த படத்தை இயக்கியுள்ளார்.

படத்தின் தொழில்நுட்பக் குழுவில் RD ராஜசேகர் ஒளிப்பதிவு, R. ராமர் படத்தொகுப்பு, ஜாக்கி மற்றும் M. விஜய் அய்யப்பன் கலை இயக்கம், பூர்த்தி மற்றும் விபின் ஆடை வடிவமைப்பு, பீட்டர் ஹைன் மற்றும் விக்கி சண்டைக் காட்சிகள், அசார் மற்றும் விஜி நடன அமைப்பு, பாடல் வரிகள் கருமாத்தூர் மணிமாறன் மற்றும் கேபர் வாசுகி என பல திறமையான கலைஞர்கள் இணைந்துள்ளனர்.  சென்னையை மையமாகக் கொண்ட ஒரு டார்க் காமெடி த்ரில்லர் என உருவாகியுள்ள மாஸ்க் திரைப்படம் உலகமெங்கும்  திரையரங்கிலும் பின்னர் OTTயிலும் ரசிகர்களை கவர தயாராகி வருகிறது.

*நடிகர்கள்:* கவின்   ஆண்ட்ரியா ஜெரமையா   ருஹாணி ஷர்மா   சார்லி

ரமேஷ் திலக்  கல்லூரி வினோத்  VJ அர்ச்சனா சந்தோக்

*தொழில்நுட்பக் குழு:* தயாரிப்பு நிறுவனங்கள்: தி ஷோ மஸ்ட் கோ ஆன் ( TSMGO ) & பிளாக் மெட்ராஸ் ஃபிலிம்ஸ்  எழுத்து & இயக்கம்: விகர்ணன் அசோக்  இசை: ஜி.வி. பிரகாஷ் குமார்  ஒளிப்பதிவு: RD ராஜசேகர்  படத்தொகுப்பு: R ராமர்  கலை இயக்கம்: ஜாக்கி, எம். விஜய் அய்யப்பன்  பாடல் வரிகள்: கருமாத்தூர் மணிமாறன், கேபர் வாசுகி  நடன அமைப்பு: அசார், விஜி  சண்டைக் காட்சிகள்: பீட்டர் ஹைன், விக்கி  ஆடை வடிவமைப்பு: பூர்த்தி பிரவீன், விபின் ஷங்கர் தயாரிப்பாளர்கள்: ஆண்ட்ரியா ஜெரமையா & SP. சொக்கலிங்கம்

மக்கள் தொடர்பு: ரியாஸ் K அஹ்மத், பாரஸ் ரியாஸ்