பாப்பி பாலச்சந்திரன் தயாரிப்பில் கீஷ் திருக்குமரன் இயக்கத்தில் அருண் விஜய், சித்தி இதானி, தன்யா ரவிச்சந்திரன், யோகி சாமி, ஜான் விஜய், ஹாரிஷ் பெரை, பலாஜி முருகதாஸ் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “ரெட்டதல”. இப்படத்தில் அருண் விஜய் இருவேடங்களில் நடித்திருக்கிறர். பாண்டிச்சேரியில் ஏழை குடிமகனாக காளி என்ற கதாபாத்திரத்திலும் கோவாவில் கோடீஸ்வரன் உபேந்திரா என்ற கதாபாத்திரத்திலும் அருண் விஜய் நடித்திருக்கிறார். சரி இனி இவர்களின் கதைக்கு வருவோம். பாண்டிச்சேரிக்கு கோடீஸ்வரரான விஜய் அருண் காரில் வருகிறார். அப்போது வழியில் நின்றுகொண்டிருக்கும் ஏழை குடிமகனான அருண் விஜயை பார்த்து தன்னைப்போலவே இருக்கின்றானே என ஆச்சிரியப்பட்டு தனது காரில் ஏற்றிக்கொள்கிறார். இருவரும் பாண்டிச்சேரிக்கு வருகிறார்கள். இருவரும் நண்பர்களாக ஆகுகிறார்கள். பணக்கார வாழ்க்கையை வாழ்ந்துபார் என்று ஏழை அருண் விஜய்யிடம் சொல்கிறார் பணக்கார அருண் விஜய். அந்த பணக்கார வாழ்க்கையின் சுகத்தை அனுபவித்த ஏழை அருண் விஜய்க்கு நிரந்தரமான பணக்காரனாக வாழ ஆசைப்படுகிறார். அதற்கு பணத்தாசை பிடித்த அவரின் காதலி சித்தி இதானியின் யோசனையால், தன்னைப்போலவே இருக்கும் பணக்கார அருண் விஜயை கொலை செய்துவிட்டு பணக்காரனாக மாறுகிறார் ஏழை அருண் விஜய். ஆனால் கோவிலிருந்து பாண்டிச்சேரிக்கு வந்த கோட்டீஸ்வர அருண் விஜய், ஏழை அருண் விஜயை கோவாவுக்கு அழைத்த்ச் சென்று அவரை கொலைசெயத்தான் பாண்டிச்சேரிக்கே வந்தார் என்பது பிறகுதான் அவருக்கே தெரியவருகிறது. அது ஏன் என்பதுதான் கதை. படத்தின் கருவே வில்லத்தனம்தான். படம் ஆரம்பம் முதல் முடிவு வரை வில்லத்தனம். பெயருக்குத்தான் கதாநாயகன் கதாநாயகி. ஆனால் செய்வதெல்லாம் வில்லத்தனத்தின் கோர முகங்கள். இதில் எங்கே நகைச்சுவையை தேடுவது. இப்படத்தில் தனது முழு பலத்தையும் உழைப்பையும் கொடுத்து நடித்திருக்கிறார். அருண் விஜய். அவர் நடித்த முந்தைய படங்களிலிருந்து முற்றுலும் மாறுபட்ட கதைக்களத்தில் நின்று போராடியிருக்கிறார் அருண் விஜய். அவருக்கு உழைப்பைத்தவிர வேரொன்றும் தெரியாது போலிருக்கிறது. நாட்டு மக்களிடம் நல்ல பெயர் எடுக்க எதிர்மறை வேடங்கள் உதவாது என்பதை அவர் உணர வேண்டும். வில்லத்தனத்தை ரசிக்கும் ரசிகர்களுக்கு இப்படம் நல்ல வேட்டை. இருக்கையின் நுனிக்கு அவர்களை உட்காரவைக்கும். அந்த அளவுக்கு கதையை காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர். விறுவிறுப்பான படத்தொகுப்பு படத்திற்கு பக்கபலமாக அமைந்திருக்கிறது. கதைக்கேற்ற இசையை கொடுத்திருக்கிறார் இசையமைப்பாளர் சாம். படம் முழுக்க நம்பியாரும் வீரப்பாவும் அருண் விஜய்யின் முகமூடி அணிந்து நடித்திருக்கிறார்கள்.
“ரெட்ட தல” திரைப்படம் விமர்சனம்
