“தி பெட்” திரைபபடம் பத்திரிக்கையாளர்களுக்கு திரயிடலக்குப்பிறகு இயக்குநர் மணிபாரதி நிருபர்களிடம் கூறியதாவது: படத்தின் நாயகன் ஸ்ரீகாந்த் தனது குடும்பத்தினருடன் விடுமுறைக்காக வெளியூர் சென்று இருப்பதால் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அவரால் இயலவில்லை. நாயகி சிருஷ்டி டாங்கேவை நாங்கள் இந்த நிகழ்வில் கலந்து கொள்ள இரண்டு முறை அழைப்பு விடுத்தும் ஏனோ அவர் வரவில்லை. இத்தனைக்கும் அவருக்கு முழு சம்பளமும் செட்டில் செய்து விட்டோம். ஒருவேளை சம்பள பாக்கி வைத்திருந்தால் வந்திருப்பாரோ என்னவோ ? என்று ஆத்கங்கப்பட்டார். தமிழ் சினிமாவில் அம்மா கதாபாத்திரங்களில் நடிக்கக்கூடிய ஒரு குறிப்பிடத்தக்க ஐந்து நடிகைகள் இருக்கிறார்கள். அவர்களை இந்த படத்தில் உள்ள அம்மா கதாபாத்திரத்தில் பயன்படுத்த முடியாது. அழைத்தாலும் அவர்கள் நடிக்க வரமாட்டார்கள்.. அப்படி சில நடிகைகளிடம் இந்த கதாபாத்திரத்தை சொன்னபோது அவர்கள் மறுத்துவிட்டார்கள். அதனால் தான் அதற்கு கேரளா சென்று ஒரு புதிய முகத்தை தேர்ந்தெடுத்து நடிக்க வைத்தோம். இவர் இனி கொஞ்ச காலத்துக்கு தமிழ் சினிமாவில் புதிய அம்மாவாக வலம் வருவார். படத்தில் ஐடி இளைஞர்களைத் தவறாகக் காட்டவில்லை. இதேபோல இன்னும் பல துறைகளிலும் இளைஞர்கள் ஜாலி என்கிற பெயரில் இப்படி கொண்டாட்டத்தில் ஈடுபடுகிறார்கள். அப்படி சென்றால் இறுதியில் அவர்கள் நிலை என்னவாகும் என்பதை தான் ஒரு எச்சரிக்கையாக சொல்லி இருக்கிறோம். ஒரு போலீஸ் அதிகாரியின் படுக்கை அறைக் காட்சியை காட்டுவது கூட, ஒரு போலீஸ்காரனை தேடி எந்த நேரத்தில் எல்லாம் வேலை வரும், அதனால் அவரது குடும்பத்தில் எந்தவிதமான பாதிப்பு இருக்கும் என்பதை சொல்வதற்காகத் தான் அந்த காட்சியை வைத்தோம். அதில் கூட ஒரு டான்ஸ் மாஸ்டரை மனைவியாக நடிக்க வைத்தோம். டான்ஸ் ஆடுபவர் என்றால் அதற்கு மட்டுமே அவரை பயன்படுத்த வேண்டுமா என்ன ? இத்தனைக்கும் என் முதல் படத்தில் அவர் நடனமாடியவர்தான். இந்த படத்தில் கதாபாத்திரமாக நடிக்க வைத்தேன்” என்று கூறினார்.
சம்பள பாக்கி வைத்திருந்தால் நாயகி புரமோஷனுக்கு வந்திருப்பாரோ என்னவோ ? ; ‘தி பெட்’ பட இயக்குநர் மணிபாரதி ஆதங்கம்
