அர்ஜூன் தாஸ் நடிக்கும் “கான் சிட்டி” பதாகை வெளியீடு

குடும்ப படமாக உருவாகும் ‘கான் சிட்டி’ திரைப்படத்தின் முதல் பதாகையை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ளார் இப்படத்தில் அர்ஜூன் தாஸ், அன்னா பென், யோகிபாபு  ஆகியோருடன் வடிவுக்கரசி மற்றும் குழந்தை நட்சத்திரம் அகிலன் ஆகிய இருவரும் முக்கிய கதாப்பாத்திரங்களில் இணைந்து நடித்துள்ளனர். இப்படம், பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வருகிறது. இந்த திரைப்படத்தை அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் எழுதி இயக்கி வருகிறார். ******

‘கான் சிட்டி’ பதாகையை பார்த்தவுடன் புன்னகை வரவைக்கும் அதே நேரம்,  ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தின் எமோஷனல் பக்கத்தையும் வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.  நகரப் பின்னணியில், ஆபிஸ் பேக்குடன் அர்ஜூன் தாஸ் அவரைச் சுற்றி ஹேண்ட் பேக்குடன் அன்னா பென்,  பயணப்பெட்டி பையுடன் யோகிபாபு மற்றும் வடிவுக்கரசி ஆகியோருடன் வீல் சேரில் ஒரு வெற்றிக் கோப்பையுடன் குழந்தை அகிலன் என,  முற்றிலும் வித்தியாசனான  இந்த போஸ்டர்,  படத்தின் கதைக்களம் என்னவாக இருக்கும் எனும் ஆவலைத் தூண்டுகிறது. கான் சிட்டி எனும் தலைப்பு இது முழுமையான கமர்ஷியல் ஃபேமிலி எண்டர்டெயினர் படம் என்பதை உணர்த்துகிறது.

*தொழில்நுட்ப குழு* எழுத்து & இயக்கம்: ஹரிஷ் துரைராஜ்ன்தயாரிப்பு: பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் ஒளிப்பதிவு: அரவிந்த் விஸ்வநாதன் எடிட்டிங்: அருள் மோசஸ்  இசை: ஷான் ரோல்டன் கலை இயக்கம்: ராஜ் கமல் உடை வடிவமைப்பு: நவா ராம்போ ராஜ்குமார் ஸ்டண்ட்: ஆக்ஷன் சந்தோஷ் மக்கள் தொடர்பு: யுவராஜ்