நடிகர் ஆதி – நடிகை நிக்கி கல்ராணி திருமணம் எளிய முறையில் நடந்தது

நடிகர் ஆதி நடிகை நிக்கி கல்ராணியின் திருமணம் சென்னையில் எளிய முறையில் நடந்தது. இருவீட்டாரின் சம்மதத்துடன் காதல் திருமணம் செய்த அழகான இளம் ஜோடி நடிகர் ஆதி மற்றும் நடிகை நிக்கி கல்ராணி திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. வரவேற்பு நிகழ்ச்சி முடிந்ததும், மணமக்கள் இருவரும் உடையை மாற்றிகொண்டு முகூர்தத்திற்கு ரெடியானார்கள். இரவு 1.30 மணியளவில் மணமகன் ஆதி, மணமகள் நிக்கி கல்ராணிக்கு தாலி கட்டினார். முகூர்தத்தில் இரு வீட்டாரின் உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் கலந்து கொண்டனர். **********

வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள்: நடிகர் நடிகைகள்: நடிகர் சங்க தலைவர் நாசர் நடிகர் சங்க துணை தலைவர் பூச்சி முருகன், விஜயகுமார், ஜீவா மற்றும் குடும்பத்தினர். அருண்விஜய் மற்றும் குடும்பத்தினர், நானி, R.k.சுரேஷ், பாபி சிம்ஹா, ஆனந்தராஜ், விஜய் வசந்த், ஆரி, சந்திப் கிஷன்,  பரத், சிரிஷ், நந்தா, ஆடுகளம் நரேன், சக்தி வாசு, ஜெய பிரகாஷ் பாண்டியராஜன் குடும்பத்தினர், மயில் சாமி, கணேஷ் வெங்கட்ராமன், சாம்ஸ், சசிகுமார், பாகியராஜ், பூர்ணிமா மற்றும் சாந்தனு குடும்பத்தினர்,விக்ரம் பிரபு, தர்சன் கணேசன், சண்முக பாண்டியன் (விஜயகாந்த் மகன் ), ரவி மரியா, டேனியல் ஆனி போப், பிரிதிவி பாண்டியராஜ். ராதிகா, சோனா, ஐஸ்வர்யா ராஜேஷ், காயத்திரி ரகுராம், சுஹாசினி,  ரோகினி,

இயக்குனர்கள்: K.s. ரவிக்குமார், ஹரி, N.லிங்குசாமி, சாமி, கோபி, ரமணா, எழில், ப்ரிதிவ் ஆதித்யா,
கணேஷ் விநாயக், வசந்தபாலன், R.கண்ணன், போயப்பட்டி ஶ்ரீனு, GNR.குமரவேல். தயாரிப்பாளர்கள். தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் தேனாண்டாள் முரளி, பிலிம் சேம்பர் தலைவர் காட்றகட்ட பிரசாத், முன்னாள் பிலிம் சேம்பர் தலைவர் C.கல்யாண், அபிராமி ராமநாதன்,  அல்லு அரவிந்த், T.சிவா, N.சுபாஷ் சந்திர போஸ், T.G.தியாகராஜன், ராஜசேகர் கற்பூரசுந்தர பாண்டியன்,
கிருஷ்ணா ரெட்டி, ஏடித நாகேஸ்வர ராஜா, கமல் போரா, தனஞ்செயன்.

இசை அமைப்பாளர்கள் இளையராஜா, தேவி ஶ்ரீ பிரசாத். பாடகர் கிரிஷ், எடிட்டர் k.L.பிரவீன், ஸ்டண்ட் மாஸ்டர் ஸ்டண்ட் சில்வா, டான்ஸ் மாஸ்டர் ஜெப்ரி வர்டன், காஸ்டியூம் டிசைனர் ஷெர், ஆகியோர் கலந்து கொண்டனர். வரவேற்பு நிகழ்ச்சியில் இசை அமைப்பாளர் நவீன் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. அனைவரையும், மணமகன் தந்தை டைரக்டர் ரவிராஜ் பினிசெட்டி, தாயார் ராதா ராணி, அண்ணன் சத்யா பிரபாஸ் பினிசெட்டி,  மணமகள் நிக்கி கல்ராணி தந்தை மனோகர் கல்ராணி, தாயார் அனிதா ரேஷ்மா, ஆதி மானேஜர் அஜய்குமார், PRO ஜான்சன், ரியாஸ் அகமத் ஆகியோர் வரவேற்றார்கள்.