சோழிங்கநல்லூர் பால்பண்ணை வளாகத்தில் அமைந்துள்ள அதிநவீன பாலகத்தில் இன்று 17.02.2024 ஆவின் தினம் கொண்டாடப்பட்டது

ஆவின் உருவாக்கப்பட்ட நாளான 01.02.1981 தினத்தையொட்டி பிப்ரவரி மாதம் முழுவதும் ஆவின்தினமாக கொண்டாடி வருகிறோம். இன்று 17.02.2024 ஆவின் தினத்தை முன்னிட்டு சோழிங்கநல்லூர்பால்பண்ணை வளாகத்தில் அமைந்துள்ள அதிநவீன பாலகத்தில் இன்று ஆவின் தினம்கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை கூடுதல்தலைமைச் செயலாளர், திரு. மங்கத் ராம் சர்மா ..., அவர்கள் மற்றும் பால்வளத்துறை இயக்குநர்மற்றும்  மேலாண்மை இயக்குநர் டாக்டர் சு. வினீத் ..., அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.  இவ்விழாவில் திரு. கஜேந்திரன் கிராமியகலைக்குழுவினரின் கரகாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால்குதிரை ஆட்டம் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.  கல்லூரி மாணவர்களுக்கான ஐஸ்கிரீம்சாப்பிடும் போட்டி நடைபெற்றது. போட்டியில் செல்வி பிரியா அவர்களுக்கு முதல் பரிசும், திரு. கனேஷ்அவர்களுக்கு இரண்டாவது பரிசும்,             திரு. பிரேம்குமார் அவர்களுக்கு மூன்றாவது பரிசை கால்நடைபராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர், திரு. மங்கத்ராம் சர்மா ..., அவர்கள் பரிசினை வழங்கினார்கள். ஆவின் பால் மற்றும் பால் உப பொருட்கள் குறித்த விழிப்புனர்வை பொதுமக்கள் இடையே ஏற்படுத்திஆவின் பால் உபபொருட்களின் வகைகளை தெரியபடுத்துவதற்கு பொதுமக்கள் முன்னிலையில் இன்றுஆவின் தினம் கொண்டாடப்படுவதாகவும், மேலும் ஆவின் உப பொருட்களின் விற்பனையை 20 சதவீதமாக உயர்த்திட பல்வேறு திட்டங்கள் மூலம் சலுகைகளை ஆவினுக்கு வழங்க அரசுமுன்வந்துள்ளதாகவும் பால்வளத்துறை இயக்குநர் மற்றும் மேலாண்மை இயக்குநர் டாக்டர் சு. வினீத்..., அவர்கள் தெரிவித்தார்கள்.

ஆவின் உருவாக்கப்பட்ட நாளான 01.02.1981 தினத்தையொட்டி பிப்ரவரி மாதம் முழுவதும், ஆவின்தினமாக கொண்டாட திட்டமிட்டு இம்மாதம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் பல்வேறு இடங்களில்நடைபெற்று வருகிறது. பொது மக்களுக்கு எத்தனை வகையான பால் மற்றும் பால் உப பொருட்கள்உள்ளது என்பதை மக்களிடையே கொண்டு சேர்ப்பதிலும் மற்றும் பொதுமக்களிடையே ஆவின் பற்றிய கருத்தினை அறிந்து கொள்ளவும்  வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகரித்திடவும் ஆவின்தின கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகிறது. தமிழக அரசும் ஆவினுக்கு பல்வேறு ஆதரவுகளைதொடர்ந்து அளித்து வருகிறது. ஆவின் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் தனது நன்றியைதெரிவிப்பதாக கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை கூடுதல் தலைமைச்செயலாளர், திரு. மங்கத் ராம் சர்மா ..., அவர்கள் தெரிவித்தார்கள்.

 ,இந்நிகழ்ச்சியில், ஆவின் பொது மேலாளர் (விற்பனைப் பிரிவு), அவர்கள் துணை பொது மேலாளர் (நிதி) அவர்கள் மற்றும் ஆவின் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.