பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் ஆலயம் தொண்டு நிறுவனம் இணைந்து  கீழ்பாக்கம் அரசு மனநல காப்பக வளாகத்தில் சுற்றித்திரியும் தெருநாய்களுக்கு (17.02.2024) நடத்திய வெறிநாய்க்கடி நோய்க்கான தடுப்பூசி முகாமினை கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப.,தொடங்கி வைத்து, நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தினார்.

பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் ஆலயம் தொண்டு நிறுவனம் இணைந்து கீழ்பாக்கம் அரசுமனநல காப்பக வளாகத்தில் சுற்றித்திரியும் தெருநாய்களுக்கு இலவச வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி போடும் முகாம் 17.02.2024  இன்று நடத்தப்பட்டது. இம்முகாமினை  பெருநகர சென்னை மாநகராட்சி கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர்டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், ..., தெருநாய்களுக்கு தடுப்பூசி செலுத்தி துவக்கி வைத்தார் மற்றும்மனநல காப்பதத்தில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடினார். இதனை தொடர்ந்து  மாநகராட்சி கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையர் அவர்களால்  விலங்கினநல ஆர்வலர்களுடன் கலந்தாலோசனை மேற்கொண்டார். இக்கூட்டத்தில் சுற்றித் திரியும் நாய்களால்பொது மக்களுக்கு  ஏற்படும் பாதிப்புகள், நாய் இனக்கட்டுப்பாட்டு விதிகள் 2023-க்குட்பட்டுபொதுமக்களுக்கு இடையூறு இன்றி  தெருநாய்களுக்கு உணவளிப்பது, தன்னாலர்வலர்கள்தெருநாய்களை தத்தெடுப்பதை வலியுறுத்துவது, பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் நடமாடும்ரேபிஸ் தடுப்பூசி செலுத்தும் வாகனங்களை இயக்குவது ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், அரசு மனநல காப்பக இயக்குநர் டாக்டர் மலையப்பன், டாக்டர் பூர்ணசந்திரிகா, கால்நடை மருத்துவர் அலுவலர் டாக்டர் கமால் உசேன், மண்டல கால்நடை மருத்துவர் கண்ணதாசன், ஆலயம் தொண்டு நிறுவனத்தை சார்ந்த திருமதி பிரபா, மாநகராட்சி கால்நடை உதவி மருத்துவர்கள்டாக்டர் கண்ணதாசன், டாக்டர் ஜானகி மற்றும் தன்னார்வலர்கள் கலந்துகொண்டனர்.