நடிகர் அஜ்மல்கான் தொழில் அதிபரின் மகளை மணந்தார்

சாட்டை, கமர்கட்டு, கீரிப்புள்ள, இளமி, விளையாட்டு ஆரம்பம் , அய்யனார் வீதி போன்ற  திரை படங்களில் கதாநாயகனாக நடித்த யுவன் என்கிற அஜ்மல் கான். இவருடைய தந்தை ஃபெரோஸ்கான் ஒரு தொழிலதிபர். இவரும் பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் யுவன் என்கிற அஜ்மல் கானுக்கும், கும்பகோணம் தங்க விலாஸ் அதிபர் சாதிக் அலி மகள் ரமீசா கஹானிக்கும்  திருமணம்  நடந்தேறியது.  இந்த திருமண விழாவில் ஏராளமான அரசியல் பிரமுகர்கள் திரை நட்சத்திரங்கள் மற்றும் தொழில் அதிபர்கள. என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதில் அரசியல் பிரமுகர்கள் காங்கிரஸ் மூத்த தலைவர் இதயத்துல்லா, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி. கே வாசன், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், விஜிபி அதிபர் சந்தோசம், ம் பிரஸிடென்ட் ஹோட்டல் அதிபர்  அபூபக்கர் மற்றும் திரையுலக பிரமுகர்கள் மன்சூர் அலிகான், ரியாஸ்கான், உமா ரியாஸ்கான் இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த்தேவா, மிஸ் இந்தியா சினேகா மற்றும் பல தொழிலதிபர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.