தியாகத்திருநாள் வாழ்த்துச் செய்தி – தலைவர், பிரசிடெண்ட் அபூபக்கர் இந்திய ஹஜ் அசோசியேசன் புதுடெல்லி

உலகம் இன்னமும் இயங்கிக் கொண்டிருப்பதற்கு காரணம் அன்பும் ஈகையும் தியாகமும் தான்; அதையேஇஸ்லாம் பறைசாற்றி வருகிறது. அந்த தியாகத்தை அனைவருக்கும் நினைவுபடுத்தும் வகையில் ஒருதியாகத் திருநாளாக உலகம் முழுக்க கொண்டாடப்படுவது பக்ரீத் பண்டிகை.

இறைவனுக்காக தன் மகனையே அறுத்து பலியிட முன்வந்த இப்ராஹிம் அலைக்கும் ஸலாம் அவர்களின் தியாகத்தை நாம் நினைவு கூற வேண்டிய நாள்இது.அடுத்தவர் பசித்திருக்க தான் மட்டும் உண்ணாமல் தன்னிடம் இருப்பதை அனைவருக்கும் பகிர்ந்துகொடுத்து விருந்தோம்பல் மூலம் பசி தீர்த்து மகிழ்ச்சி தழைக்க அனைவரும் ஒன்றிணைந்து வாழவேண்டும் என்ற ஒற்றுமையை வலியுறுத்தும் நாள் இது.

தன் வீடு,தன் மக்கள் என்று இல்லாமல் சமூகம்,சமுதாயம், சகோதரத்துவம் என  சாதி மத, இனவேற்பாடுகளை கடந்து அனைவரும் ஒன்றாக பயணிக்கும் போது மட்டுமே இந்த உலகம் மகிழ்ச்சியில்திளைக்கும். அதனை நினைவு கூறுவதற்கான நாள் இந்த நாள்.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாய் அடுத்தவருக்கு பயனுள்ள வகையில் வாழ்ந்து காட்டுவோம். அன்பை விதைத்து அனைவரது இதயங்களிலும் நம்பிக்கை விதைகளை தூவிச் செல்வோம். நமக்கானவாழ்வு நமக்கானதாய் மட்டுமல்லாது அனைவருக்குமானதாய் இருக்க வேண்டும் என்பதே நபிகளாரின்வார்த்தை.

அந்த வார்த்தைகளை வாழ்க்கையாக வாழ்ந்து காட்டுவோம் இந்த ஈகை தியாகத்திருநாள் நாளில் இந்தநாட்டிற்கு அன்பும் அமைதியும் சமாதானமும் சகோதரத்துவமும் இன்றி இமையாத தேவை என்பதைமனதில் நிறுத்தி அனைவருக்கும் பக்ரீத் வாழ்த்துக்களை தெரிவித்து விருந்தளித்து  மகிழ்ச்சியாய்வாழ்வோம்.