அட்லர் எண்டர்டெய்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், நவீத் எஸ். ஃபரீத் இயக்கத்தில் நிஷாந்த் ரூஷோ, பிக்பாஸ் வர்ஷிணி, ஷாலினி. ரோபோ சங்கர், புகழ், கேபிஒய் ராஜா, கேபிஒய் யோகி, கேபிஒய் வினோத் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் திரைப்படம் “சொட்டச் சொட்ட நனையுது” படத்தின் கதநாயகன் நிஷாந் ரூஷோவின் தாத்தா, அப்பா இருவருக்கும் வழுக்கைதலை. மூன்றாவது தலமுறை வழுக்கை நிஷாந் ரூஷோவுக்கும் இருக்கிறது. இதனால் இவருக்கு யாரும் பெண் கொடுக்க மறுக்கிறார்கள். அவரின் வீட்டுக்கு எதிர் வீட்டில் குடியேறும் கதாநாயகி பிக்பாஸ் வர்ஷினி, நிஷாந்தின் நல்ல குணத்தைப் பார்த்து அவரை திருமணம் செய்துகொள்ள சம்மதம் தெரிவிக்கிறாள். பல பெண்கள் மறுத்ததால் தனக்கு திருமணமே ஆகாது என்ற முடிவுக்கு வந்த நிலையில் பிக்பாஸ் வர்ஷினி சம்மதம் தெரிவித்ததால் அதிச்சியில் ஆனந்த கூத்தாடுகிறார். திருமண ஏற்பாடுகள் எல்லாம் இருவீட்டார்களும் தடபுடலாக கவனிக்க தொடங்குகிறார்கள். திருமண மண்டபத்தில் நலங்கு சடங்குகள் விருந்து உபச்சாரங்கள் எல்லாம் நடந்தேறி வருகிறது. மாலையில் திருமண வரவேற்பு ஆடல் பாடலுடன் நடந்து முடிகிறது. நாளை காலையில் திருமணம். மணப்பெண் கோலத்தில் மணமகள் வீற்றிருக்க மணமகன் நிஷாந்த் ரூஷோ திடீரென திருமணத்தை நிறுத்திவிடுகிறார். எல்லோரும் அதிர்ச்சியடைகிறார்க்ள். ஏன் திருமணத்தை நிறுத்தினார்? வழுக்கை தலையான அவருக்கு மீண்டும் திருமணம் நடந்ததா? இல்லையா? என்பதுதான் கதை. பரம்பரை வழுக்கை தலையர்களின் உள்ளத்தின் வலியை, நிஷாந்த் ரூஷோ கச்சிதமாக வெளிப்படுத்தி வழுக்கையர்களின் உள்ளத்தில் இடம் பிடிக்கிறார். பிக்பாஸ் வர்ஷிணி, ஷாலினி. ரோபோ சங்கர், புகழ், கேபிஒய் ராஜா, கேபிஒய் யோகி, கேபிஒய் வினோத் ஆகிய அனைவரும் எந்த குறையுமின்றி தங்களது கதாபாத்திரத்தை பூர்த்தி செய்திருக்கிறார்கள். படத்தின் ஓட்டத்திற்கு பின்னணி இசை நன்றாக ஒத்துழைத்திருக்கிறது. ஒளிப்பதிவும் படத்தொகுப்பும் படத்துக்கு நன்றாக உதவியிருக்கின்றன. சிறிதளவு குழப்பமென்றாலும் கதையின் கருவை குழப்பமின்றி நகைச்சுவை கலந்து அழகாக கொல்லியிருக்கிறர் இயக்குநர் நவீத் எஸ். ஃபரீத்
“சொட்டச் சொட்ட நனையுது” திரைப்பட விமர்சனம்
