“சுழல் 2” தொடர் விமர்சனம்

அமேசான் பிரைம் தயாரிப்பில் புஷ்கர்-காயத்ரி உருவாக்கத்தில் வெளிவந்திருக்கும் இணையத் தொடர் “சுழல் 2”.  2022 ஆம் ஆண்டு வெளிவந்த “சுழல்” தொடர்  வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அதன் 2 பாகமாக இன்று வெளிவந்திருக்கிறது “சுழல் 2”.  இத்தொடரில் கதிர்,  ஐஸ்வரியா ராஜேஷ், லால், சரவணன், மஞ்சிமா மோகன், கயல் சந்திரன், கவுரி கிஷன், சம்யுக்தா, மோனிஷா, ஷிரிஷா, அபிராமி, நிகிலா, ரினி, கலைவாணி, சாந்தினி, அஷ்வினி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். கொலைக் குற்றத்திற்காக ஐஸ்வரியா ராஜேஷ் சிறையில் இருக்கிறார். அவருக்காக வக்கீல் லால் வாதாடுகிறார். அதனால் அவர் கொலை செய்யப்படுகிறார். கொலை குற்றவாளியை கண்டுபிடிக்க போலீஸ் ஆய்வாளர் சரவணனும் உதவி ஆய்வாளர் கதிரும் பலரை விசாரணை செய்து கொண்டிருக்கும்போது 8 இளம் பெண்கள், “வக்கீல் லாலை நாங்கள்தான் கொலை செய்தோம்” என்று காவல் நிலையத்தில் ஆஜர் ஆகுகிறார்கள். ஆனால் இவர்கள் கொலை செய்திருக்க மாட்டார்கள் என்று உதவி ஆய்வாளர் கதிர் திட்டவட்டமாக நம்புகிறார். அப்படியானால் வக்கீலை யார் கொலை செய்தார்கள்?. எதற்காக 8 இளம் பெண்கள் கொலைக் குற்றத்துற்காக ஆஜர் ஆனார்கள்?. உணமையான கொலைக் குற்றவாளி யார்? என்பதுதான் கதை. சூரசம்ஹாரமும் மயானக் கொல்லையும் நடக்கும் சம்பவத்தோடு கதையை இணைத்திருப்பது விறுவிறுப்பையும் அடுத்தக் கட்ட நகர்வையும் ஆவலுடன் எதிர்பார்க்க வைக்கிறார் இயக்குநர்.  8 எபிசோடுகளும் சலிப்பு தட்டாமல் ஆவலுடன் எதிர்பார்க்க வைக்கின்றன். மர்மங்களும் அதிரடி திருப்பங்களும் நிறைந்ததாக கதை கதை செல்கிறது. சிறைச்சாலையில் ஐஸ்வரியா ராஜேஷ் நடிப்பு அனைவரையும் கவர்கிறது. தொடர் முழுவதும் அமைதியான தோற்றத்திலேயே கதிர் நடித்திருப்பது ரசிக்கவில்லை. சரவணன் எப்போது வருவார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கும் அளவுக்கு சரவணன் நடித்துள்ளார். (சபாஷ் சரவணன்) மஞ்சிமா மோகனின் நடிப்பு அலாதியானது. தாய்க்குலத்தின் பெருமையை காப்பாற்றும் கதாபாத்திரத்தில் அசத்தியுள்ளார். மர்ம நாவல் படிபவர்களுக்கு சுழல்2 மிகவும் பிடிக்கும்.