“அந்தநாள்”! படத்தை இயக்க மிஷ்கின் வாங்கிய முன்பணம் ரூ. ஒரு கோடியை திரும்பியளித்தார் – ஆர்யன் ஷியாம்

ஏவிஎம் சரவணனின் பேத்தியான அபர்ணாவை திருமணம் செய்துகொண்டவர் ஆர்யன் ஷியாம். தற்போது அவர் “அந்தநாள்” என்ற படத்தை தயாரித்து நடித்து உள்ளார். மிஷ்கின் இயக்கத்தில் நான் நடிப்பதாக இருந்தது. ஆனால் அது நடக்கவில்லை. இந்த நிலையில் மிஷ்கின் இயக்கிய சைக்கோ படத்தைவிட பத்து மடங்கு சிறந்த படத்தை உருவாக்க வேண்டும் என சபதம் எடுத்தேன். நானே கதை திரைக்கதை அமைத்தேன். தயாரித்து நடிக்கவும் செய்தேன். படப்பணிகள் முழுவதும் முடிந்து கடந்த பிப்ரவரியில் சென்சார் போர்டுக்கு அனுப்பிவைத்தோம். நரபலி, பில்லி சூனியம் மற்றும் அதிரடி காட்சிகள் இருப்பதால் சான்றிதழே கொடுக்க முடியாது என்றனர். அதாவது படத்தை திரையிடவே முடியாத நிலை. பிறகு ரிவைசில் கமிட்டிக்கு படத்தை அனுப்பினோம். நடிகை கவுதமி தலைமையிலான அந்த கமிட்டி படத்தை பார்த்தது. “ஏ” சான்றிதழ் அளித்தது. இதையடுத்து விரைவில் படம் வெளியாகிறது. “அந்தநாள்” படத்தை நானே தயாரித்து நடித்திருந்தாலும் ஒரு விசயத்தைச் சொல்ல வேண்டும். படத்தில் இதுவரை தமிழ் திரைப்படங்களில் வராத அளவுக்கு பயங்கரமான அதிரவைக்கும் காட்சிகள் பல உள்ளன. ஆகவே கர்ப்பிணி பெண்கள் பயந்த சுபாவம் கொண்டவர்கள். “அந்தநாள்” படத்தைப் பார்க்காதீர்கள். படத்தின் வசூல் என்பதைவிட என்னால் யாரும் பாதிக்கப்படக் கூடாது என்பதால் இதைச் சொல்கிறேன் என்றார். இதற்கிடேயே தமிழ் மற்றும் தெலுங்கில் தாயரிக்கப்பட்ட திருப்பதி வெங்கடஜலபதி புராண வரலாற்றிலும் ஆர்யன் நடித்தார்.
      

“அந்தநாள்” படம் குறித்த செய்தியாளர் சந்திப்பில் ஆர்யன் தெரிவித்தாவது, மிஷ்கின் இயக்கத்தில் நான் நடிப்பதாக இருந்தது. அதற்காக அவருக்கு ஒரு கோடி ரூபாய் முன்பணம் அளித்தேன். ஆனால் பட உருவாக்கம் தள்ளிப்போய்க் கொண்டே இருந்தது. எனது படம் துவங்கப்படுவதாக இல்லை. அவர் வாங்கிய முன்பணத் தொகையையும் திரும்பத் தரவில்லை. இந்த நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்து எனது ஆதங்கத்தைத் தெரிவித்துருந்தேன். தற்போது நான் கொடுத்த முன்பணம் ரூ.ஒரு கோடியை மிஷ்கின் திரும்ப அளித்துவிட்டார். தவிர அவரது சார்பில் மிஷ்கின் முன் பணத்தை திருப்பித் தரவில்லை என பத்திரிக்கைகளில் வெளிவந்தது. இது அவருக்கு அவப்பெயர் ஏற்பட்டு விட்டது. ஆகவே முன்பணத் தொகையை திருப்பி அளித்தையும் பத்திரிகையாளர்களிடம் சொல்லுங்கள் என்று கூறப்பட்டது. ஆகவேதான் இந்தத் தகவலை சொல்கிறேன் என்றார் ஆர்யன்.********