செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டம் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் படாளம் மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் ச.அருண்ராஜ், இ.ஆ.ப., நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். 

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டம் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் படாளம்மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் .அருண்ராஜ், ..., நேரில்பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் தாலுக்கா, படாளம் கிராமத்தில்மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலை அமைந்துள்ளது. ஆலையின் மொத்த பரப்பளவு 101.57 ஏக்கர் ஆகும். மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலை கடந்த 18.03.1961 அன்று 800 TCD திறனுடன் அரைவையினைதொடங்கியது. பின்னர் அரைவை திறன் 1969-ல் 1000 TCD ஆகவும், 1977–ல் 1750 TCD ஆகவும், 1995–96 பருவத்தில் 2500 TCD ஆகவும் அதிகரிக்கப்பட்டது. ஆலையின் தற்போதைய அரைவைத் திறன் 2500 TCD ஆகும். ஆலையின் அங்கீகரிக்கப்பட்ட பங்கு மூலதனம் ரூ.600.00 லட்சம் மற்றும் 31.03.2022 அன்றுசெலுத்தப்பட்ட பங்கு மூலதனம் ரூ.17335,49 லட்சம், இதில் அரசு பங்குக்காக 3. 16995.68 LED. கரும்புவிவசாயிகள் உறுப்பினர்கள் எண்ணிக்கை 26832. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம், திருக்கழுக்குன்றம். செங்கல்பட்டு, திருப்போரூர், செய்யூர் தாலுக்காக்கள் முழுவதும் இவ்வாலையின் கரும்புபகுதிகளாக ஒதுக்கப்பட்டுள்ளது. கரும்பு பற்றாக்குறையின் காரணமாக கடந்த 2001-2002 முதல் 2009-2010 வரை ஆலை அரைவை நிறுத்தம் செய்யப்பட்டது. மூலப்பொருட்கள் தட்டுப்பாடு காரணமாக ஆலைகள்அடுத்தடுத்த பருவங்களில் அதன் அரைவை செயல்பாட்டைத் தொடங்க முடியவில்லை. பங்குதாரர்கள் மற்றும்கரும்பு விவசாயிகளின் தொடர் முயற்சியின் விளைவாகவும், கூட்டுறவுத் துறையின் கீழ் இயங்கும் ஆலையைமீண்டும் தொடங்குவதற்கு தமிழ்நாடு அரசால் ரூ.18.45 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இவ்வாலையில்மீண்டும் 2010-2011-ம் ஆண்டு அரைவைப் பருவத்தில் சோதனை ஓட்டம் நடைபெற்றது. ஆலை 31.03.2011 அன்று சோதனை அரைவை தொடங்கி 27.04.2011 அன்று நிறைவு செய்யப்பட்டு ஆலையில் தொடர்ந்துகரும்புகளை அரைவை செய்து சர்க்கரை மூட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

இந்நிகழ்ச்சியில் படாளம் கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குநர்இணை பதிவாளர் தே.ஜவகர் பிரசாத் ராஜ், அலுவலக மேலாளர் கஜேந்திரன், விரிவாக்க அலுவலர் ஜெகதீசன், தொழிலாளர் நல அலுவலர் திருமுனுசாமி, துணை தலைமை பொறியாளர் திரு.சரவணகுமார், துணை தலைமைவேதியலாளர் திருநீலகண்டன், மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளனர்.  மற்றும் அரசு அலுவலர்கள், பலர்கலந்து கொண்டனர்.