4 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‘வணங்கான்’ வெள்ளோட்டக் காட்சி

சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்சன்ஸ்,  பாலாவின் இயக்கத்தில் தயாரித்து வரும் படம்வணங்கான்’. அருண் விஜய் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக ரோஷினி பிரகாஷ் நடிக்கிறார். முக்கிய வேடங்களில் சமுத்திரக்கனி, மிஷ்கின், சண்முகராஜன் ஆகியோர் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். கலை படைப்பா, வியாபார படைப்பா என பிரித்துப் பார்க்க முடியாதபடி இரண்டையும் சரிவிகிதத்தில் கலந்து படங்களை இயக்கி வருபவர் இயக்குநர் பாலா.  தரமான படைப்புகளின் மூலம் ரசிகர்களின் ரசனைக்குத் தீனி போடும் விதமாக படங்களைத் தயாரித்த. வருபவர் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி. இவர்கள் இருவரின் கூட்டணியில் உருவாகி வரும் படம் என்பதாலேயேவணங்கான்படம் குறித்து ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இப்படத்தின் வெள்ளோட்டம் வெளியான ஒரே நாளிலேயே இதுவரை 4 மில்லியன் ரசிகர்கள்  பார்த்து ரசித்துள்ளனர்.*******

ஏற்கெனவேவணங்கான்படத்தின் பதாகை வெளியாகி வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது வெளியாகியுள்ளவணங்கான்படத்தின் டீசரும் அதை உறுதி செய்வது போல ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று வருகிறது. அருண்விஜய்யின் மாறுபட்ட கதாபாத்திரமும் அவரது தோற்றமும், ஸ்டண்ட் சில்வாவின் கைவண்ணத்தில்தெறிக்க வைக்கும் ஆக்சன் காட்சிகளும், நாடித்துடிப்பை எகிறவைக்கும் ஜிவி பிரகாஷின் இசையும், ‘வணங்கான்படத்தின் டீசரை ரிப்பீட் மோடில் பார்க்கும் ஆவலைத் தூண்டுகிறது. ஒளிப்பதிவை ஆர்.பி.குருதேவ் மேற்கொள்ள, சதீஷ் சூர்யா படத்தொகுப்பாளராகப் பணியாற்ற, கலைஇயக்குநராக ஆர்.பி.நாகு பொறுப்பேற்றுள்ளார். தற்போதுவணங்கான்படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.