சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகக் கூட்டரங்கில் மேயர் ஆர்.பிரியா தலைமையில் சர்வதேச மகளிர் தின விழா நடைபெற்றது

பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் சர்வதேச மகளிர் தின விழா  மேயர் ஆர்.பிரியா தலைமையில் ரிப்பன் கட்டட  வளாகக் கூட்டரங்கில்  (08.03.2024)  நடைபெற்றது. இவ்விழாவில் பெருநகர சென்னை மாநகராட்சி மாண்புமிகு மேயர் அவர்கள் பங்கேற்று, பல்வேறுதுறைகளில் சிறப்பாகப் பணியாற்றிய 25 மகளிர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு மகளிர்சாதனையாளர் விருதுகளை வழங்கிப் பாராட்டினார். மேலும் சர்வதேச மகளிர் தினத்தினை முன்னிட்டு, மகளிர் அலுவலர்களுக்கிடையே நடைபெற்ற கோலப்போட்டி, கவிதைப் போட்டி, பாட்டுப்போட்டி, பாசிங்பால் (Passing Ball) மற்றும் ஆடை அலங்கார அணிவகுப்பு (Fashion Show) உள்ளிட்ட  போட்டிகளில்வெற்றி பெற்ற 15 மகளிருக்கு கேடயத்தினையும் மேயர் வழங்கினார். இவ்விழாவில் மேயர் பேசியதாவது.மகளிர் தினம் என்பது இன்று ஒரு நாள் மட்டும் இல்லை. ஒவ்வொரு நாளும் நமக்கு மகளிர் தினம்என்பதை நினைத்து நமக்கு நாமே முக்கியத்துவம் கொடுத்து பெருமைக் கொள்ள வேண்டும். இன்று மகளிர் தினம் என்பதைத் தாண்டி எனக்கு தனிப்பட்ட முறையில் இது ஒரு சிறப்பான நாள்.  ஏனெனில் இரண்டாண்டுக்கு முன்பு நான் மேயராக பதவி பொறுப்பேற்ற பிறகு முதல் முதலாக கலந்துகொண்ட நிகழ்வு இந்த மகளிர் தின விழா. எல்லா ஆண்களுக்குப் பின்னும் ஒரு பெண் இருப்பார்கள்என்பது போல், எல்லா பெண்களுக்கு பின்னும் ஒரு ஆண் இருப்பார்கள்.

மகளிர் தினத்தில் மட்டும் மகளிரை கொண்டாட வேண்டும் என்பதை தவிர்த்து, ஒவ்வொரு நாளும்பெண்கள் கொண்டாடப்பட வேண்டும் அதுதான் என்னுடைய கருத்து. ஏனெனில், பெண்கள் ஒவ்வொருநாளும் தனது குடும்பத்திற்காகவும், தனது சமுதாயத்திற்காகவும் பாடுபடுகின்ற காரணத்தினால் நிச்சயம்எப்பொழுதும் கொண்டாடப்பட வேண்டும். தற்பொழுது பெண்கள் அனைத்து துறைகளிலும் சிறப்பாகசேவை புரிந்து வருகின்றனர். அனைத்து வேலைகளையும் திறமையாக செய்யக் கூடியவர்கள் பெண்கள். ஒவ்வொரு நாளும் உங்களுடைய உடல் நலத்திற்காகவும், மனநலத்திற்காகவும் ஒரு குறிப்பிட்ட நேரத்தைஒதுக்க வேண்டும். பெண்கள் தினம் என்பதை தாண்டி, நம் வீட்டில் உள்ள ஆண் குழந்தைகளிடம் பெண் பிள்ளைகளிடம்எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும், அவர்களை எப்படி மதிக்க வேண்டும் என்பதை குழந்தைப் பருவம்முதலே சொல்லிக் கொடுத்து வளர்க்க வேண்டும். அப்பொழுது தான் பிற்காலத்தில் அந்த ஆண் குழந்தைசமுதாயத்தில் பெண்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் தர வேண்டும், மரியாதை தர வேண்டும் என்பதைகற்றுக் கொள்ளும். அனைவருக்கும் இனிய மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் எனமாண்புமிகு மேயர் அவர்கள் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து பெருநகர சென்னை மாநகராட்சியில் பணியாற்றும் மகளிர் அலுவலர்கள், பணியாளர்களின் கலைநிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றன.

இந்நிகழ்ச்சியில்,  துணை மேயர்  மு. மகேஷ்குமார், கூடுதல் ஆணையாளர்கள் டாக்டர்வி. ஜெய சந்திர பானு ரெட்டி, ..., (சுகாதாரம்), ஆர். லலிதா, ..., (வருவாய் () நிதி), துணை ஆணையாளர்கள் எம்.பி.அமித், ..., (தெற்கு வட்டாரம்), கே.ஜெ. பிரவீன் குமார், ..., (மத்திய வட்டாரம்), கட்டா ரவி தேஜா, ..., (வடக்கு வட்டாரம்), நிலைக்குழுத்தலைவர் (பொதுசுகாதாரம்) டாக்டர் கோ. சாந்தகுமாரி, சர்பஜெயாதாஸ் நரேந்திரன் (வரிவிதிப்பு() நிதி), உதவி ஆணையாளர் (பொ.நி...) செல்வி உமா மகேஸ்வரி, மாநகர மருத்துவ அலுவலர் டாக்டர் எஸ். பானுமதி, அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.