சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண் உத்தரவின் பேரில்,பொதுமக்கள் எளிதில் அணுக கூடிய வகையிலும், உதவிகள் தேவைப்படும் பொதுமக்களுக்கு உரிய அவசர உதவிகளை வழங்கிடவும், சென்னை பெருநகர காவல்துறை பல்வேறு வகைகளில் பொதுமக்களுக்கு உதவி வருகிறது. சென்னை பெருநகர காவல் “காவல் கரங்கள்” உதவி மையம் மூலம் கடந்த ஜுன் மாதத்தில் 20 வீடற்று உதவிகளற்று இருந்த நபர்களை தன்னார்வலர்கள், உதவியுடன் காவல் துறையினருடன் மீட்டு தகுந்த உதவிகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டு அரசு தன்னார்வதொண்டு அமைப்பு இல்லங்களில் தங்க வைக்கப்பட்டு உரிய விசாரணை மேற்கொண்டு காணாமல் போனவர்களாக விவரங்கள் தெரியவர காவல் கரங்கள் மூலம் அவர்களது குடும்ப முகவரியை கண்டறிந்து குடும்பத்தினருடன் தொடர்பு கொண்டு மீண்டும் சேர்த்து வைக்கப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு 2025-ல் 802 மீட்கப்பட்ட நபர்களில் 142 நபர்களின் உரிய முகவரி கண்டறிந்து அவர்களது குடும்பத்தினருடன் மீண்டும் சேர்த்து வைக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பிடும்படியாக, கடந்த 26.06.2025 அன்றுசென்ட்ரல் ரயில்வே காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில்மறதியால் விவரங்கள் வழங்க இயலாத நிலையில் ஆதரவற்றநிலையில் இருந்த மூதாட்டி திருமதி. வனஜா, வயது 72 என்பவரை காவல் கரங்கள் மூலம், தன்னார்வலர்கள்உதவியுடன் மீட்டு அரசு காப்பகத்தில் அனுமதிக்கப்பட்டுபராமரிக்கப்பட்டு வரப்பட்டார். காவல் கரங்கள் மூலம்மீட்கப்பட்ட மூதாட்டியிடம் விவரங்கள் பெற்று அவரது மகன்வசிப்பிடமான முகவரியை கண்டறிந்து அவரிடம் விசாரணைசெய்ய அவரது தாயார் கடந்த 25.06.2025 அன்றுகோயிலுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் வீட்டிற்குதிரும்ப வரவில்லை என்றும் பல இடங்களில் தேடியும்கண்டுபிடிக்க முடியாததால் கடந்த 27.06.2025 அன்று K2 அயனாவரம் காவல் நிலையத்தில் தனது தாயார்காணவில்லை என்று புகார் அளித்த நிலையில் காவல்நிலைய குற்ற எண். 251/2025 பெண் காணவில்லை பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் தேடிவந்ததாகவும் தெரிவித்தார். காவல் கரங்கள் மூலம்,மீட்கப்பட்ட பெண் முதியவரை 02.07.2025 அன்று அவரதுமகன் திரு.பரணி குமார் என்பவருடன் நல்ல முறையில்; சேர்த்து வைக்கப்பட்டார்.
கடந்த 01.06.2025 முதல் 30.06.2025 வரை 120 ஆதரவற்ற நபர்கள் மீட்கப்பட்டு அவர்களில் 59 நபர்கள் அரசுமற்றும் தன்னார்வ தொண்டு நிறுவன காப்பகங்களில்அனுமதிக்கப்பட்டும், 20 நபர்கள் அவர்களதுகுடும்பங்களுடன் மீள சேர்த்து வைக்கப்பட்டனர். 32 மனநலம் பாதிக்கப்பட்ட நபர்கள் சிகிச்சைக்காக மனநலமருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர், மேலும் 9 உடல்நிலை சரியில்லாத நபர்கள் 108 ஆம்புலன்ஸ்சேவைகள் மூலம் அரசு மருத்துவமனைகளில்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மேலும் முறையானவிசாரணைக்கு பின்னர் உரிமை கோரப்படாத 105 உடல்கள்அரசு சாரா தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் இறுதிமரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
ஒட்டுமொத்தமாக, கடந்த நான்கு ஆண்டுகளில்:
• 8498 நபர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
• 5715 நபர்கள் இல்லங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
• 1358 நபர்கள் அவர்களது குடும்பங்களுடன் மீண்டும்சேர்த்து வைக்கப்பட்டுள்ளனர்.
• 1032 மனநலம் பாதிக்கப்பட்டவர் மனநல சிகிச்சைபெற்று வருகின்றனர்.
• 393 நபர்கள் உடல்நலக் குறைவினால் அரசுமருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றனர்.
மேலும் முறையான விசாரணைக்கு பின்னர் உரிமைகோரப்படாத 5438 உடல்கள் அரசு சாரா தொண்டுநிறுவனங்களின் உதவியுடன் இறுதி மரியாதையுடன்நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளனர். வீடற்ற அல்லது கைவிடப்பட்ட நபர்களைதுயரத்திலிருந்து மீட்டு பராமரிப்பதில் உதவ, காவல் கரங்கள்உதவி எண்ணை (9444717100) தொடர்பு கொள்ளுமாறுஅனைத்து பொதுமக்களையும் சென்னை பெருநகரகாவல்துறை கேட்டுக்கொள்கிறது.