கிண்டி பகுதியில் தனியார் வங்கியில் பல லட்சம் கள்ள ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்ய முயன்ற வழக்கில் 2  நபர்கள் கைது

சென்னை, ஈக்காட்டுத்தாங்கல் பகுதியில் உள்ள தனியார் HDFC வங்கியில் வாடிக்கையாளர் போர்வையில் ரூபாய்.2,01,500- மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை ஒருவர் டெபாசிட் செய்ய முயன்ற போது, வங்கி ஊழியர் வாடிக்கையாளர் கொடுத்த ரூபாய் நோட்டுகளை சரிபார்த்த போது அதில் ஒரு 500 ரூபாய் நோட்டை தவிர மற்ற (ரூ.500X402-ரூ.2,01,000/-)அனைத்தும் போலியானது என தெரிய வந்தது இது குறித்து மேற்படி வங்கியின் மேலாளர் ஈஸ்வர் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் சென்னை, மத்தியகுற்றப்பிரிவு-1, போலி ஆவண புலனாய்வு பிரிவில் வழக்குப்பதிவு செய்து உதவி ஆணையாளர் காயத்ரி, மற்றும் காவல் ஆய்வாளர் பீட்டா-10 பிரபு  மற்றும் காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்து மேற்படி வழக்கில் தொடர்புடைய செந்தில்குமாரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர். அவரிடமிருந்து மொத்தம் ரூபாய். 5.11 லட்சம் மதிப்புள்ள கள்ள ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

இக்குற்றச் செயலில் தொடர்புடைய  மற்ற குற்றவாளிகளையும், கண்டறிந்து கைது செய்து இவ்வழக்கில்  துரித நடவடிக்கை எடுக்க சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண் உத்தரவிட்டதின் பேரில்  மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையாளர் ராதிகாவின்  வழிகாட்டுதலின் பேரில், காவல் துணை ஆணையாளர் கீதாஞ்சலி மேற்பார்வையில் உதவ. ஆணையாளர், காயத்ரி காவல் ஆய்வாளர் பிரபு தலைமையிலான காவல் குழுவினர் மேற்படி வழக்கில்   சம்பந்தப்பட்ட  மற்றொரு எதிரி சாம்பிரவீன் சந்தன்ராஜ், வ/44, என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 1 செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்ட மற்ற தலைமறைவு எதிரிகளை காவல் குழுவினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.  கைது செயயப்பட்ட எதிரி சாம்பிரவீன் சந்தன்ராஜ் விசாரணைக்குப்பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார்.