சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண் உத்தரவின் பேரில், சென்னையில் தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்டுவரும் குற்றவாளிகளின் தொடர்ச்சியான குற்ற நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, உரிய சட்ட நடவடிக்கைகளின்படி, நீதிமன்ற வழிகாட்டுதல்களை பின்பற்றி சென்னை பெருநகரில் கொடுங்குற்றங்கள், பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல், தொடர்ச்சியாக திருட்டு, சங்கிலிபறிப்பு, வழிப்பறி, பணமோசடி குற்றங்களில் ஈடுபடுதல், போதைப் பொருள் விற்பனை, அனுமதியற்ற மதுபானங்கள் விற்பனை செய்தல், சைபர் குற்றங்களில் ஈடுபடுதல், பாலியல் தொழில் நடத்துதல், உணவுப்பொருள் கடத்துதல் போன்ற குற்றங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் நபர்களை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்து குற்றவாளிகளின் தொடர் குற்ற நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண் குண்டர் தடுப்பு சட்ட அலுவலக பிரிவில் பணிபுரிந்து வரும் கண்காணிப்பாளர் ஐயப்பன் உட்பட காவல் குழுவினரை நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.
கடந்த 08.07.2024 முதல் 07.07.2025 வரை சென்னை பெருநகரில் 1002 குற்றவாளிகள் உரிய சட்ட நடவடிக்கைகளின்படி குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் கடந்த 2024 ஜூலை மாதம் வடசென்னையில் ஆம்ஸ்ட்ராங் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய 26 குற்றவாளிகள் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் எடுத்த நடவடிக்கைகளினால் 10 மாதங்களுக்கு மேலாக தொடர்ந்து சிறையில் இருந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.