மாதவரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இருசக்கர வாகனங்களை திருடிய பழைய குற்றவாளி கைது.

சென்னை, பொன்னியம்மன்மேடு, முனுசாமி நகர், எண்.31 என்ற முகவரியில்வசிக்கும் பார்த்திபன், வ/30, த/பெ.சிவா என்பவர் கடந்த 02.05.2022 அன்று இரவு அவரதுபுல்லட் இருசக்கர வாகனத்தை வீட்டின் வாசலில் நிறுத்திவிட்டு, மறுநாள் (03.05.2022) காலை பார்த்தபோது, அவரது இருசக்கர வாகனத்தை யாரோ திருடிச் சென்றுவிட்துதெரியவந்தது. இது குறித்து பார்த்திபன் M-1 மாதவரம் காவல் நிலையத்தில் புகார்கொடுத்ததின்பேரில், வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

​​M-1 மாதவரம் காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலானகாவல் குழுவினர் சம்பவ இடத்தினருகில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராபதிவுகளை தீவிரமாக ஆய்வு செய்து, மேற்படி புல்லட் இருசக்கர வாகனத்தை திருடிச்சென்ற எதிரி விஜயகுமார், வ/27, த/பெ.குமார், காளியம்மன் கோயில் தெரு, ராமதேவநல்லூர், அரியலூர் மாவட்டம் என்பவரை கைது செய்தனர்விசாரணையில் எதிரி விஜயகுமார், மேற்படி புகார்தாரரின் புல்லட் இருசக்கரவாகனம் உட்பட மாதவரம் சுற்றுப்புற பகுதிகளில் நிறுத்தியிருந்த இருசக்கரவாகனங்களை திருடியது தெரியவந்தது. அதன்பேரில், எதிரியிடமிருந்து புகார்தாரரின் 1 புல்லட் இருசக்கர வாகனம் உட்பட 4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதுமேலும் விசாரணையில் எதிரி விஜயகுமார் மீது தர்மபுரி மாவட்டத்தில் சுமார் 8 திருட்டு வழக்குகளும், சென்னையில், S-7 மடிப்பாக்கம், S-4 நந்தம்பாக்கம், S-14 பீர்க்கன்கரணை, S-11 தாம்பரம், R-10 எம்.ஜி.ஆர். நகர், F-5 சூளைமேடு மற்றும் சில காவல்நிலையங்களில் ஏற்கனவே திருட்டு வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது​​​கைது செய்யப்பட்ட எதிரி விஜயகுமார், விசாரணைக்குப் பின்னர்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்ப உள்ளார்.