கே.கேநகர் பகுதியில் கால்நடை மருத்துவ கல்லூரியில் சீட்வாங்கி தருவதாக கூறி சுமார் ரூ.42 லட்சம் மோசடி செய்த வழக்கில் பெண் கைது.

தங்கமுகையதீன்
———————–
சென்னை, அசோக்நகர் பகுதியில் வசித்து வரும் ஆண்டனி அமிர்தராஜ், வ/51, என்பவர் பேக்கரி கடை நடத்தி வருகிறார். கடந்த 2023ம் ஆண்டு ஆண்டனி அமிர்தராஜ்க்கு அறிமுகமான சின்னத்துரை , லட்சுமி பிரியா, அருண் மற்றும் மஞ்சுநாதா ஆகியோர் ஆண்டனி அமிர்தராஜின் மகனுக்கு கால்நடை மருத்துவக் கல்லூரியில் சீட்டு வாங்கி தருவதாக கூறியதை நம்பி அவர்களிடம் 3 தவணைகளாக சுமார் ரூ.42 லட்சத்தை கொடுத்துள்ளார். ஆனால் பேசிய படி மேற்படி நபர்கள் கால்நடை மருத்துவ கல்லூரியில் சீட் வாங்கி தராமல் ஏமாற்றியுள்ளனர். உடனே ஆண்டனி அமிர்தராஜ் அவர்களிடம் பணத்தை திரும்ப கேட்டபோது மேற்படி நபர்கள் ரூ.4,44,000/- மட்டும் திருப்பி கொடுத்துவிட்டு, மீதமுள்ள பணத்தை கொடுக்காமல் தொடர்ந்து ஏமாற்றி வந்துள்ளனர். இது குறித்து ஆண்டனி அமிர்தராஜ் R-7 கே.கே.நகர் காவல் நிலைய குற்றப்பிரிவில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். கே.கே.நகர் காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்ததில் புகார்தாரர் குறிப்பிட்டிருந்தது உண்மையென தெரியவந்ததின்பேரில், மேற்படி குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட லட்சுமி பிரியா, வ/45, என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ.1 லட்சம் மீட்கப்பட்டது மேற்படி வழக்கில் தொடர்புடைய மற்ற குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர். கைது செய்யப்பட்ட லட்சுமி பிரியா விசாரணைக்குப் பின்னர், (23.12.2025) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.