சென்னை பெருநகர காவல் ஆணையாளர், கனடாவில் நடைபெற்ற உலக காவல் மற்றும் தீயணைப்பு போட்டிகள்-2023 போட்டியில் 28 பதக்கங்கள் வென்ற 8 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை நேரில் அழைத்து வாழ்த்தினார்.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சந்தீப் ராய் ரத்தோர், .கா.., அவர்கள் மேற்படி உலகஅளவிலான தடகள போட்டியில் பதக்கங்கள் சென்ற சென்னை பெருநகர காவல்துறையைச் சேர்ந்த 8 காவல்அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை இன்று (17.08.2023) நேரில் அழைத்து பாராட்டினார்.

உலக காவல்துறை மற்றும் தீயணைப்பு விளையாட்டு போட்டிகள்-2023 (World Police & Fire Games – 2023), கனடா நாட்டிலுள்ள வின்னிபெக் நகரில் கடந்த 28.07.2023 முதல் 06.08.2023 வரைநடைபெற்றது. இப்போட்டியில் அகில இந்திய காவல்துறை கட்டுப்பாட்டின் கீழ் பொது பிரிவில் (Regular) 4காவல் ஆளிநர்கள் தமிழக காவல்துறை சார்பாக கலந்து கொண்டனர். மேலும், மூத்தோர் (Veterans) பிரிவில்தமிழக காவல்துறை சார்பாக 15 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் கலந்து கொண்டனர். இதில் சென்னைபெருநகர காவல்துறையைச் சேர்ந்த 2 காவல் ஆளிநர்கள் பொது பிரிவிலும் (Regular), மூத்தோர் பிரிவில்((Veteran) 6 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களும் அடங்குவர். ஏறக்குறைய 70 நாடுகளிலிருந்து சுமார்8,500 வீரர்கள் கலந்து கொண்ட இப்போட்டியில் சென்னை பெருநகர காவல்துறையைச் சேர்ந்த 8 காவல்அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள், 16 தங்கம், 8 வெள்ளி மற்றும் 4 வெண்கலம் என 28 பதக்கங்களை வென்றுதமிழக காவல்துறைக்கும், சென்னை பெருநகர காவல்துறைக்கும் பெருமை சேர்த்தனர்.

சென்னை பெருநகர காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் மேற்படி போட்டியில் கீழ்கண்ட பதக்கங்களைவென்றனர்.