சிறப்பாக பணிபுரிந்த காவல் அதிகாரிகளை பாராட்டிய ஆணையர்

சென்னை பெருநகர அடையார் காவல் நிலைய முதல் நிலைக்காவலர்கள் சங்கர் லட்சுமணப. பெருமாள், கிண்டி காவல் நிலைய ரோந்து வாகன பொறுப்பு தலைமைக்காவலர் மோகன், ஆயுதப்படை காவலர் சில்வானு, கிண்டி போக்குவரத்து தலைமைக்காவலர் பஞ்சாட்சரமூர்த்தி, ஆயுதப்படை காவலர்கள் அஜித், சுரேஷ்குமார், மத்தியகுற்றப்பிரிவு உதவி ஆய்வாளர்கள் கனகராஜ்,  ராஜிவ் என 9 காவல் அதிகாரிகள் ஆகியோருக்கு ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் பாராட்டி சான்றிதழ்வழங்கினார்*******

மற்றும் ஆளிநர்கள் கடந்த 25.10.2023 அன்று கிண்டி, சர்தார் படேல் ரோடு, ராஜ்பவன் பாதுகாப்பு பணியிலிருந்த போது, சுமார் மதியம் 3.00 மணியளவில், சர்தார் படேல் ரோடு, ராஜ்பவன் நோக்கி பெட்ரோல்நிரப்பபட்ட பாட்டில்களை வீச முயன்ற வினோத் () கருக்கா வினோத் என்பவரை துணிச்சலாக மடக்கிப்பிடித்து கைது செய்து எந்தவித அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் தடுத்து சிறப்பாகபணிபுரிந்துள்ளனர்.