செப்டம்பர் 20-ம் தேதியன்று, சேலையூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சந்தோக்ஷபுரம், சோதனைச் சாவடி அருகே ஒரு காவல் உதவி ஆய்வாளர் மற்றும் 2 காவலர்கள் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, போக்குவரத்துக் காவலர் கதிரேசன், அதிக பாரம் ஏற்றி வந்த வாகன ஓட்டுநரிடம் அபராதத்தைத் தவிர்க்க, தனது இருசக்கர வாகனத்தில் ரூ. 500 வைக்குமாறு கூறியுள்ளார. அதேபோல், செப்டம்பர் 23, 2025 அன்று, மேடவாக்கம் கடைவீதியில், பீட் காவலர்களான திருமுருகன் மற்றும் வெங்கடேசன் இருவரும் தெரு வியாபாரியிடம் லஞ்சம் பெற்றுள்ளனர். இதுகுறித்த, முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில், தாம்பரம் மாநகர காவல் ஆணையாளர் அபின் தினேக்ஷ் மோதக் கண்டிக்கத்தக்க நடத்தைக்காக ஐந்து காவலர்களையும் தற்காலிகப் பணிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். இந்நடவடிக்கை, தாம்பரம் மாநகர காவல் துறையின், நேர்மையையும் பொதுமக்களின் நம்பிக்கையையும் பாதுகாப்பதில் உறுதியாக உள்ளதை எடுத்துக்காட்டுகிறது.
லஞ்சம் வாங்கிய காவலர்களை பணியிடை நீக்கம் செய்த தாம்பரம் காவல்த்துறை ஆணையர்
