பெரும்பாக்கம் இளைஞர்களின் நேர்மைக்குபாராட்டு தெரிவித்து சான்று வழங்கிகௌரவித்த தாம்பரம் மாநகர காவல் ஆணையர்

கடந்த ஆகஸ்ட் 12, 2025 அன்று, மாலை 17:30 மணியளவில், பெரும்பாக்கம், எழில் நகர், பிளாக்: 86, எண். 40-ல் வசிக்கும்        திரு. சதிஷ் குமார், வஃ35, தஃபெ. ரகுநாத், என்பவர் பொன்மார் பகுதியில் உள்ள மீன்கடையில் வேலைபார்த்து வருகிறார் மற்றும் அதே பகுதியில் எண். 42-ல் வசிக்கும் திரு. கிஷோர், வஃ23, தஃபெ. பழனியப்பன், என்பவர் பெரும்பாக்கத்தில் சுயினைழ ஓட்டி வருகிறார்,இவர்;கள் இருவரும் செம்மஞ்சேரியில் உள்ள சவுத் இந்தியன் வங்கி ஏடிஎம்-க்கு பணம் எடுக்கச் சென்றுள்ளனர். அப்;போது, அந்த யுவுஆ மிஷினில் ரூ.10,000ஃ- இருந்துள்ளது, அதைப்பார்த்த இளைஞர்கள், மேற்படி பணத்தை உரிய நபரிடம் ஒப்படைக்க, பெரும்பாக்கம், காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். காவல்துறையினர் அப்பணத்தை ஆகஸ்ட் 14, 2025 அன்று சவுத் இந்தியன் வங்கியில் டெபாசிட் செய்து, அதன்பேரில் வங்கி அதிகாரிகள், விசாரணை செய்து, பணம் உரிய நபரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த இளைஞர்களின் நேர்மைப் பண்பை பாராட்டி, தாம்பரம் மாநகர காவல் ஆணையாளர் அவர்கள், திரு. சதிஷ் குமார் மற்றும் திரு. கிஷோர் ஆகியோரின் பெருமைமிக்க செயலுக்கு வாழ்த்து தெரிவித்து, அவர்களுக்கு பணவெகுமதியுடன் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி கௌரவித்தார். அவர்களின் இந்த நேர்மையானசெயல் சமுதாயத்திற்கு ஒரு சிறந்த முன்மாதிரியாகத் திகழ்ந்து, மக்களின் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தும்.