செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் மற்றும் இலத்தூர் ஒன்றியங்களில் பல்வேறு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் தி.சினேகா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

(24.12.2025) செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் மற்றும் இலத்தூர்
ஒன்றியங்களில் பல்வேறு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் தி.சினேகா, பார்வையிட்டு ஆய்வு செய்தார்.வரவிருக்கின்ற 2026 சட்டமன்ற பொது தேர்தலை முன்னிட்டு மதுராந்தகம் சுபம் கல்லூரியில் வாக்கு எண்ணும் மையத்தினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், கட்டிடத்தின் உறுதித்தன்மை மற்றும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்படும் அறை அவற்றின் உறுதி தன்மையினை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உறுதிப்படுத்துமாறு அறிவுறுத்தினார். மேலும், வாக்கு பதிவு முடிந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையங்களில் உள்ள காப்பு அறையில் வைக்கப்பட்ட நாளிலிருந்து வாக்கு எண்ணும் நாள் வரை வாக்கு எண்ணும் மையத்தில் என்னென்ன பணிகள் செய்ய வேண்டுமென்று  துறை
சார்ந்த அலுவலர்களுக்கு ஆட்சியர் தெரிவித்தார். அதனை தொடர்ந்து, செங்கல்பட்டு மாவட்டம், இலத்தூர் ஒன்றியத்தில் திருவாதூர் ஊராட்சி மற்றும் பவுஞ்சூர் ஊராட்சி FBDP திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஆகையால், அறிவுசார் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளுக்கான பள்ளி மற்றும் பயிற்சி வகுப்புகள் அமைப்பதற்கான இடத்தினை மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார். அதனை தொடர்ந்து, இலத்தூர் ஒன்றியம் நெடுமரம் ஊராட்சியில் கட்டப்பட்டு வரும் புதிய ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இந்நிகழ்வுகளில், மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர் ரம்யா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருவளர்ச்செல்வி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கதிர்வேல் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.