நடிகர் தனுஷ் எழுத்து மற்றும் இயக்கத்தில் மூன்றாவது திரைப்படமாக வெளியீட்டுக்கு தயாராகியுள்ளது ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’. இத்திரைப்படத்தில் பவிஷ், அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், மேத்யூ தாமஸ், வெங்கடேஷ் மேனன், ராபியா கதூன், ரம்யா ரங்கநாதன், சித்தார்த் ஷங்கர்,R சரத்குமார், சரண்யாபொன்வண்ணன், ‘ஆடுகளம்’ நரேன், உதய் மகேஷ், ஶ்ரீதேவி உள்ளிட்ட மாபெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது. தனுஷின் ஆஸ்தான தொழில்நுட்ப குழுவான G V பிரகாஷ் இசையமைக்க, லியான் பிரிட்டோ ஒளிப்பதிவில், பிரசன்னா G K படத்தொகுப்பில், ஜாக்கி கலை இயக்கத்தில், ‘பாபா’ பாஸ்கர் நடன இயக்கத்தில் பிப்ரவரி-21 அன்று வெளியாக உள்ளது.*******
இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இதில் சிறப்பு அழைப்பாளர்களாக எஸ்.ஜே.சூர்யா, அருண் விஜய், இயக்குனர்கள் செல்வராகவன், கஸ்தூரி ராஜா, விக்னேஷ் ராஜா,ராஜ்குமார் பெரியசாமி, தமிழரசன் பச்சமுத்து, தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் உள்ளிட்டோருடன் படத்தின் முக்கிய நடிகர்கள் மற்றும் சரண்யா பொன்வண்ணன், பாடலாசிரியர் விவேக், கலைஇயக்குனர் ஜாக்கி, ஒளிப்பதிவாளர் லியான் பிரிட்டோ, பாடகி சுபலாஷினி உள்ளிட்ட படக்குழுவினரும் கலந்து கொண்டனர்.
படக்குழு: எழுத்து மற்றும் இயக்கம்: தனுஷ் தயாரிப்பு : கஸ்தூரி ராஜா & விஜயலக்ஷ்மி கஸ்தூரி ராஜா தயாரிப்பு நிறுவனம் : வுண்டர்பார் ஃபிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் இசை : GV பிரகாஷ் குமார் ஒளிப்பதிவு : லியான் பிரிட்டோ படத்தொகுப்பு : பிரசன்னா G K கலை இயக்கம் : ஜாக்கி நடன இயக்கம் : பாபா பாஸ்கர், மொயின், சுரேன் R & பிரசாந்த் ஆடை வடிவமைப்பு : காவ்யா ஶ்ரீராம் ஆடைகள் : நாகு ஒப்பனை : B ராஜா படங்கள் : முருகன் விளம்பர வடிவமைப்பு : கபிலன் செல்லையா ஒலி வடிவமைப்பு : ஸிங்க் சினிமா தயாரிப்பு நிர்வாகி : D. ரமேஷ் குச்சிராயர் நிர்வாக தயாரிப்பாளர் : ஸ்ரேயாஸ் ஶ்ரீனிவாசன் மக்கள் தொடர்பு: ரியாஸ் K அஹ்மத், பாரஸ் ரியாஸ்