செங்கல்பட்டு மாவட்டம் செய்யூரில் புரட்சிகர சோசலிஸ்ட் கட்சியின்  மகளிர் அமைப்பான  ஐக்கிய மகிளா சங்கம்   தனது   தடத்தை பதித்தது .

ஐக்கிய தொழிற்சங்க காங்கிரசின் (U.T.U.C.)தேசிய குழு உறுப்பினரும், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞருமான தோழர் க.தேசிங்.M.A.M L.  தலைமையில்  இப்பயணம் அமைந்தது. சுமார் 50-க்கும் மேற்பட்ட  பெண்கள் தேவராஜபுரத்தில் கூடினர்.  ஐக்கிய மகளிர் சங்கத்தின் மாவட்ட அமைப்பு கூட்டம் U.M.S.ன் மாநில தலைவரும்,அகில இந்திய துனைதலைவருமான தோழர்.கு.காமாட்சி  தலைமையில் நடை பெற்றது. தோழர் பிரிசில்லா  அனைவரையும் வரவேற்க, தோழர், ரீட்டா  முன்னிலை வகிக்க பேரவை  மிக சிறப்பாக கூடியது. புரட்சிகர சோசலிஸ்ட் கட்சியின் தென்சென்னை மாவட்ட செயலாளர் தோழர்,க.தனபால்  இன்றைய அரசியல் அவலங்களையும்,ஏன் நீங்கள் ஐக்கிய மகிளா சங்கத்தின் களமாட வேண்டுமா என்பதனையும் சுட்டும் வண்ணம் தமது துவக்க உரையை நிகழ்த்தினார். இந்நிகழ்வில் செங்கதிர்  அமைப்புசாரா சங்கத்தின் செயலாளர் தோழர்,முனுசாமி, சென்னை மாவட்ட  பெண்கள் ஆட்டோ ஓட்டுனர் சங்கத்தின் செயலாளர் தோழர் ,கோமளா தேவி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். U.M.S.ன் மாவட்ட  தலைவராக  தோழர் ரீட்டா , மாவட்ட செயலாளராக தோழர் பிரிசில்லா,  பொருளாளராக தோழர்,ஜோஸ்பின்  ,துனை தலைவராக தோழர்,கஸ்தூரி, துனை செயலாளராக தோழர் எழிலரசி ஆகியோர் ஒருமனதாக தேர்வு பெற்றனர்.

தேர்வு பெற்ற மாவட்ட நிர்வாகிகளை தோழர் க.தேசிங்M.A.M .  வாழ்த்திய தோடு ,இன்றைய அரசியல் அவலங்களை தோலூரித்ததோடு அல்லாமல் ,ஐக்கிய மகிளா சங்கம் தமிழகம் முழுவதும் தனது பயணத்தை தொடர வேண்டும், இது காலத்தின் கட்டாயம் என கூறினார். தங்களது அனைத்து நிகழ்விற்கும் U.T.U.C. துனை நிற்கும் என கூறினார். தோழர் மஞ்சுளா  நன்றி கூறி கூட்டத்தை நிறைவு செய்தார்.