“டீசல்” திரைப்பட விமர்சனம்

தேவராஜலு மார்கண்டேயன் தயாரிப்பில், சண்முகம் முத்துச்சாமி இயக்கத்தில் ஹரிஸ் கல்யாண், அதுல்யா ரவி, வினய் ராய், சசிகுமார், அனன்யா, கருணாஸ், போஸ் வெங்கட், ரமேஷ் திலக், காளி வெங்கட், விவேக் பிரசன்னா, சச்சின் கேடகர், ஜாஹிர் உசேன், தங்கதுரை, மாறன், கே.ஒய்.பி.தீனா, அபூர்வா சிங் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “டீசல்”. சென்னை துறைமுகத்துக்கு கப்பலில் வரும் கச்சா எண்ணெய்யை குழாய் மூலம் எண்ணெய் சுத்தகரிப்பு ஆலைக்கு கொண்டு செல்லும் வழியில் மீனவக் குடியிறுப்பு உள்ளது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்புக்கு உள்ளாகுமென போராட்டங்கள் நடக்கின்றன. போராட்டத்க்தையும் மீறி அதிகார வர்க்கத்தினரால் கப்பலிலிருந்து கச்சா எண்ணெய் சுத்தகரிப்பு ஆலைக்கு கொண்டு செல்லப்படுகிறது. இதனால் மீனவரான சாய்குமார் குழாயிலிருந்து கச்சா எண்ணெய்யை திருடி அதை விற்று மீனவர்களின் வாழ்வாதாரத்துக்கு உதவி செய்கிறார். அவரது வளர்ப்பு மகன் ஹரிஸ் கல்யாண் வேதியல் படித்த பட்டதாரி. அதனால் கச்சா எண்ணெய்யைலிருந்து டீசல் பெட்ரோல் தயாரித்து விற்பனை செய்து வருகிறார். ஹரிஷ் கல்யாணுக்கு  தொழில் ரீதியான பிரச்சனைகளை விவேக் பிரசன்ன. செய்கிறார். அவரி கொடுக்கும் தொந்தரவுகளை எப்படி ஹரிஸ் கல்யாண் சமாளிக்கிறார்? என்பதுதான் கதை. மிகவும் இக்கட்டான கதையை கையில் எடுத்திருக்கும் இயக்குநர் சண்முகம் முத்துச்சாமியை பாராட்ட வேண்டும். பணக்கார கும்பபலும் அரசியல்வாதிகளின் சதியாட்டத்தையும் அவர்களுக்கு துணை நிற்கும் ஒருசில காவல்த்துறையினரின் உள்குத்து வேலையையும் திரையில் துணிச்சலுடன் பிரதிபலித்திருக்கிறார் இயக்குநர். ஹரிஷ் கல்யாண் தன்னுடைய நடிப்பை சிறப்பாக வெளிபடுத்தியிருக்கிறார். ஹரிஷ் கல்யாண்னின் உச்சக்கட்ட காட்சியின் நடிப்பு பார்வையாளர்களை கைத்தட்ட வைக்கிறது. படத்தில் நடித்திருக்கும் ஏனைய நடிகர்கள் அனைவரும் தங்களின் கதாபாத்திரத்தை உள்வாங்கி அருமையாக நடித்துள்ளார்கள்.  குறிப்பாக அதுல்யா ரவியின் வருகை ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுக்கிறது.  ஒவ்வொருகட்டத்தையும் ஆவலுடன் எதிர்பார்க்க வைக்கின்றன.