மாநில காவல்துறை துப்பாக்கி சுடுதல் போட்டி

தமிழ்நாடு காவல்துறையானது ஆண் மற்றும் பெண் காவலர்களின் துப்பாக்கி சுடும் திறமைகளை அங்கீகரிக்கவும் அவர்களின் துப்;பாக்கி சுடும் திறன்களை மேம்படுத்தவும் ஒவ்வொரு வருடமும் மாநில அளவிலான காவல்துறை துப்பாக்கி சுடும் போட்டிகளை நடத்தி வருகிறது. இப்போட்டியானது இந்த வருடம் செங்கல்பட்டு மாவட்டம் ஒத்திவாக்கத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு அதிதீவிரப்படைஃபள்ளி பயிற்சி மையம்ஃதுப்பாக்கி சுடு தளத்தில் 24.07.2025 முதல் 26.07.2025 வரை ஆண்களுக்கான போட்டிகள் தனியாகவும் பெண்களுக்கான போட்டிகள் தனியாகவும் நடத்தப்பட்டன. இதில் மொத்தம் 13 வகையான போட்டிகள் 3 பிரிவுகளின் கீழ் நடத்தப்பட்டது. ரைபில் பிரிவு (5 போட்டிகள்), பிஸ்டல் ஃ ரிவால்வர் பிரிவு (4 போட்டிகள்) மற்றும் கார்பைன்ஃஸ்டன் கன் பிரிவு (4 போட்டிகள்). இப்போட்டிகளில் தமிழ்நாடு காவல்துறையின் பல்வேறு நகரங்கள், மண்டலங்கள் மற்றும் சிறப்பு பிரிவுகளில் பணிபுரியும் 204 ஆண் போட்டியாளர்கள் 9 அணிகளாகவும் 101 பெண் போட்டியாளர்கள் 8 அணிகளாகவும் கலந்து கொண்டனர். 26.07.2025 அன்று நடைபெற்ற நிறைவு விழாவில் மேற்கண்ட துப்பாக்கி சுடும் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும் வெற்றி பெற்ற அணிகளுக்கும் சங்கர் ஜிவால், இ.கா.ப., காவல் துறை தலைமை இயக்குநர் மற்றும் படைத்தலைவர்  பதக்கங்கள், சான்றிதழ்கள் மற்றும் சுழற் கேடயங்களை அளித்து வாழ்த்துரை வழங்கி சிறப்பித்தார்.

ஆண்களுக்கான மாநில துப்பாக்கி சுடுதல் போட்டி-2025ன் ஒட்டுமொத்த சாம்பியன்சிப் கோப்பையை தெற்கு மண்டலம் அணி வென்றது. அதுபோல தலைமையிட அணி ஒட்டுமொத்த சாம்பியன்சிப் இரண்டாமிட கோப்பையையும் ஆயதப்படை அணி ஒட்டுமொத்த சாம்பியன்சிப் மூன்றாமிட கோப்பையையும் வென்றன. மேலும், பெண்களுக்கான மாநில துப்பாக்கி சுடுதல் போட்டி-2025ன் ஒட்டுமொத்த சாம்பியன்சிப் கோப்பையை மேற்கு மண்டலம் அணி வென்றது. அதுபோல வடக்கு மண்டலம் அணி ஒட்டுமொத்த சாம்பியன்சிப் இரண்டாமிட கோப்பையையும் சென்னை மாநகர காவல் அணி ஒட்டுமொத்த சாம்பியன்சிப் மூன்றாமிட கோப்பையையும் வென்றன.

இவை தவிர ஆண்கள் பிரிவில் சிறந்த துப்பாக்கி சுடும் வீரர்களுக்கு ஒட்டுமொத்த பெஸ்ட் ஷாட் மெடல் ரிவால்வர்ஃபிஸ்டல் பிரிவிலும் கார்பைன்ஃஸ்டன் கன் பிரிவிலும் வழங்கப்பட்டன. இதே போல் பெண்கள் பிரிவில் சிறந்த துப்பாக்கி சுடும் வீராங்கனைகளுக்கு ஒட்டுமொத்த பெஸ்ட் ஷாட் மெடல் ரிவால்வர்ஃபிஸ்டல் பிரிவிலும் கார்பைன்ஃஸ்டன் கன் பிரிவிலும் வழங்கப்பட்டன.