தமிழக காவல்த்துறையினர் ரூ.4 கோடி போதைப் பொருளை தீயிட்டு அழித்தார்கள்

சட்டவிரோத போதைப்பொருளை ஒழிப்பதற்கான மாநிலம் முழுவதும் எடுக்கப்பட்ட தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக கூடுதல் காவல் துறை இயக்குனரின் வழிகாட்டுதலின் பேரில் மாநிலம் முழுவதும் போதை பொருள் நுண்ணறிவு பிரிவு போலிசாரால் 339 வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 3408.345 கிலோ கஞ்சா, 0.728 கி.கிஹெராயின், 1.2 கி.கி சாரஸ், 1 கிகி டைசிப்பம், 1 கிகி கஞ்சா சாக்குலேட் மற்றும் 1.1 கி.கிமெத்தாம்பிட்டமைன் உள்ளிட்ட மொத்தம் ரூ. 4 கோடி மதிப்பிலான போதை பொருள் ஒழிப்பு குழுமத்தின் மேற்பார்வையில் செங்கல்பட்டு தென்மேல்பாக்கம் பகுதியில் தீயிலிட்டு அழிக்கப்பட்டது. காவல் துறை தலைவர், (குற்றம்), காவல் கண்காணிப்பாளர் (போதை பொருள் நுண்ணறிவு பிரிவு) மற்றும் துணை இயக்குனர் (தடய அறிவியல் துறை) ஆகியோர்கள் அடங்கிய குழுவினரால் மேற்படி கஞ்சா தீயிலிட்டு அழிக்கப்பட்டது. 2025 ஆம் ஆண்டில் இதுவரை, 2081 வழக்குகளில்பறிமுதல் செய்யப்பட்ட மொத்தம் 29,738.07 கிலோஉலர் கஞ்சா, 77.67 கிலோ ஹாஷிஷ் ஆயில், 104.2 கிலோ சாரஸ், 2.59 கிலோ ஹெராயின், 1 கிகி டைசிப்பம், 246.6 கிலோ கஞ்சா சாக்லேட், 2.71 கிலோ மெத்தாம்பிட்டமைன் உள்ளிட்ட 31 கோடிமதிப்பிலான போதைப் பொருள்களைபோதைபொருள் நுண்ணறிவு பிரிவினரால்எரிக்கப்பட்டுள்ளது.

மேலும் பொதுமக்கள், போதைப்பொருள் மற்றும் மனமயக்க பொருட்களின் சட்டவிரோத விற்பனை மற்றும் கடத்தல் தொடர்பான எந்தவொரு தகவலையும் 10581 என்ற கட்டணமில்லா உதவி எண்ணிலும், 9498410581 என்ற வாட்ஸ்-அப் மூலமாகவும் அல்லது spnibcid@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவும் தெரியப்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.