வெளிநாடு வாழ் இந்தியர்களுக்காக உருவாக்கப்பட்ட பிரத்யேக செயலி

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கடந்த 13.09.2021 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைகூட்டத்தொடரின் 2021-22ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் (மானியக் கோரிக்கைஎண்.22) வெளியிட்ட அறிவிப்பின்கீழ், அரசாணை (பல்வகை) எண்.184/உள் (காவல்-XIII) துறை நாள்04.04.2022-ன் படி, சென்னை, மயிலாப்பூரில் உள்ள காவல்துறை தலைமை அலுவலகத்தில் வெளிநாடு வாழ்இந்தியர்கள் பிரிவு ஜுலை 2022 முதல் செயல்பட்டு வருகிறது. இப்பிரிவானது வெளிநாடு வாழ் தமிழர்கள் மற்றும்அவர்கள் குடும்பத்தினரின் குறைகளை தீர்த்து வைப்பதற்காக துவக்கப்பட்டது.

வெளிநாடு வாழ் இந்தியர்கள் பிரிவானது, பாதிக்கப்பட்ட நபர்களிடமிருந்து நேரடியாக மனுக்களைபெறுவதுடன், தமிழ் நாடு அரசு, பிற அரசு துறைகள் மற்றும் மாநில காவல்துறை தலைவர் ஆகியோரிடமிருந்துமனுக்களை பெற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் மின்னஞ்சல் வழியாகவும் தங்களது புகார்களை பதிவு செய்துவந்தனர்.  தங்கள் புகார்களை தங்குதடையின்றி பதிவு செய்வதற்கு ஏதுவாக, தமிழ் நாடு காவல் துறையின்அங்கீகரிக்கப்பட்ட வலைப்பின்னலில் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான பிரத்யேக செயலி ஒன்றுஉருவாக்கப்பட்டு, ஆகஸ்டு 4, 2023 முதல் பயன்பாட்டிற்கு வரவிருக்கிறது.

இத்தகைய வெளிநாடு வாழ் இந்தியர்களின் பிரத்யேக செயலியில் புகார்களை பதிவு செய்தவுடன், புகார்தாரருக்கான தனி முகவரி எண் உருவாக்கப்படும்.  வெளிநாடு வாழ் இந்தியர்கள் பிரிவில் பெறப்படும் புகார்மனுக்கள், தகுந்த சரிபார்ப்பிற்குப் பின்னர், சம்பந்தப்பட்ட மாநகர / மாவட்ட காவல்துறையின் விசாரணைக்குஅனுப்பி வைக்கப்படும்.

மாநகரம் / மாவட்டத்தில் உள்ள வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான முகமை அதிகாரி அப்புகார்களைசம்பந்தப்பட்ட காவல் உட்கோட்ட அதிகாரியின் மேல் நடவடிக்கைக்காக அனுப்பி வைப்பார்.  மனுக்கள் மீதானவிசாரணை முடிந்தவுடன், விசாரணை அறிக்கை மற்றும் மாநகர / மாவட்ட முகமை அதிகாரியிடமிருந்துபெறப்பட்ட ஆவணங்கள் ஆகியவற்றை வெளிநாடு வாழ் இந்தியர் பிரிவு அதிகாரிகள் ஆராய்ந்து, பாரபட்சமற்றவிசாரணை மேற்கொண்டதை உறுதி செய்துகொள்வர். பின்னர், விசாரணை அறிக்கையின் விவரங்கள், வெளிநாடு வாழ் இந்தியர் பிரிவில் உள்ள அதிகாரியின் அங்கீகாரத்துடன் புகார்தாரருக்குஅனுப்பிவைக்கப்படும்.

புகார் மனு மீதான நடவடிக்கையின் ஒவ்வொரு கட்டமும் புகார்தாரருக்கு மின்னஞ்சல் மூலமாகதெரியப்படுத்தப்படும்.  மேலும், மனுவினை பதிவேற்றம் செய்தபோது புகார்தாரருக்கு வழங்கப்பட்ட தனி முகவரிஎண்ணை அதற்கான செயலியில் உள்ளீடு செய்து, புகார்தாரர் மனுவின் தற்போதைய நிலையைஅறிந்துகொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

புகார் மனுக்கள் தொடர்பான அறிக்கைகளை இச்செயலி மூலம் தேதி வாரியாகவும், நாடு வாரியாகவும், புகாரின்வகை வாரியாகவும், புகார் மனுக்கள் மீதான நிலைமை வாரியாகவும் பல்வேறு அறிக்கைகளாகபெற்றுக்கொள்ளலாம்.

இந்த செயலிக்கான இணைப்பு தமிழ்நாடு காவல்துறை வலைதளத்தில் (https://eservices.tnpolice.gov.in/)இருந்து பயன்படுத்தி கொள்ளலாம். மேலும் பயனர் வழிகாட்டி, தமிழ்நாடு காவல்துறை YouTube சேனலில்(@TNPOLICEOFFICIAL) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இச்செயலியில் புகார் தெரிவிப்பது குறித்துஏதேனும் கேள்விகள் இருப்பின், வெளிநாடு வாழ் இந்தியர்கள் பிரிவு தொலைபேசி எண்.044-28470025 என்றஎண்ணிற்கு தொடர்பு கொண்டு தெளிவு பெறலாம்.