தர்ஷன் பிலிம்ஸ் சார்பில் ஜோதி சிவா தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம். ‘நிழற்குடை’. சிவா ஆறுமுகம் கதை திரைக்கதை எழுதி இயக்குகிறார், இவர் இயக்குநர் கே.எஸ் அதியமானிடம் உதவியாளராக பணியாற்றியவர்.. தேவயானி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்தில் விஜித் கதாநாயகனாகவும் கண்மணி கதாநாயகியாகவும் மற்றும் முக்கிய வேடங்களில் இளவரசு, ராஜ்கபூர் மனோஜ்குமார் வடிவுக்கரசி, நீலிமா இசை, நிஹாரிகா, அஹானா என இரு குழந்தைகள் நடித்துள்ளனர் மேலும் தர்ஷன் சிவா என்ற புதுமுகம் மிரட்டலான கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறார்.
‘நிழற்குடை’ படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் இயக்குநர் கே.பாக்கியராஜ் பேசும்போத.,” “எங்க அம்மா எனக்கு இந்த பெயரை வைத்து பெருமைப்பட வைத்துவிட்டார். ஆனால் இயக்குனர் ராஜகுமாரனின் நிஜ பெயரே அதுதானா ? இல்லை சினிமாவுக்கு வந்த பின் வைத்துக் கொண்டாரா என்பதைவிட தேவயானி கிடைக்கும்போது அவர் உண்மையானவை ராஜகுமாரன் ஆகிவிட்டார். சினிமாவைப் பொறுத்தவரை சில பேருக்கு மட்டும் இவர்களுக்கெல்லாம் எப்படி படம் கிடைத்துக் கொண்டே இருக்கிறது என்கிற எண்ணம் ஏற்படும். அதேபோல சில பேரை பார்க்கும்போது இவர்களுக்கு ஏன் படமே கிடைப்பது இல்லை என்ற எண்ணமும் ஏற்படும். அப்படி இரண்டாவது லிஸ்டில் இருப்பவர் தான் இயக்குனர் கே.எஸ் அதியமான். ஒரு கிலோ அறிவாளியாக இருந்தாலும் 10 கிராம் அதிர்ஷ்டக்காரனிடம் கைகட்டி தான் நின்றாக வேண்டும் என்று சொல்வது போல, சினிமாவில் அதிர்ஷ்டம் சில நேரம் திறமைசாலிகளுக்கு கை கொடுக்காது. நிழற்குடை. படத்தின் டைட்டிலுக்கு ஏற்ப இந்த படத்தின் இயக்குனர் சிவா ஆறுமுகத்திற்கு கே.எஸ் அதியமான் உள்ளிட்ட பட குழுவினர் நிழற்குடையாக இருக்கிறார்கள். அதுபோல இந்த படத்திற்கு நிழற்குடையாக தேவையானி நிற்கிறார்” என்று பேசினார்.
*நடிகை நமீதா பேசும்போது,* “இந்த படத்தில் சொல்லப்பட்டுள்ள விஷயம் இப்போது நாட்டில் நடக்கக்கூடிய ஒரு நிஜம் தான். இந்த சமயத்தில் என் வீட்டில் இருக்கும் என் மாமியார், மற்றும் ஆயாம்மாக்கள் இருவருக்கும் நன்றி சொல்லணும். ஆயாம்மா பணிக்கு இப்போது நல்ல மதிப்பும் சம்பளமும் இருக்கிறது. அம்மா இல்லாத இடத்தில் அவர்தான் அம்மா. இந்த படத்தில் அதை கொஞ்சம் திரில்லிங் அம்சங்கள் சேர்ந்து காட்டி இருக்கிறார்கள். படம் பார்ப்பவர்கள் பல இடங்களில் தங்களுடன் அதை தொடர்பு படுத்திக் கொள்வார்கள்” என்று கூறினார்.
நடிகை தேவயானி பேசும்போது,* “என்னுடைய குடும்ப விழா இது. இந்த மேடையில் 30 வருடங்களுக்கு முன்பு என்னை அறிமுகம் செய்த இயக்குநர் கே.எஸ் அதியமானுருக்கு நான் நன்றி சொல்ல விரும்புகிறேன். எனக்கு திரை உலகில் திருப்புமுனை கொடுத்த படம் காதல் கோட்டை என்றாலும் திரையுலகில் என்னை முதன்முறையாக அறிமுகம் செய்து இந்த தமிழ்நாட்டிற்குள் அழைத்து வந்ததே இயக்குநர் கே.எஸ் அதியமான் தான். அவருக்கு எங்கேயுமே நான் நன்றியை வெளிப்படையாக சொன்னது இல்லை. இதுதான் அவருக்கு நன்றி சொல்லும் முதல் மேடை. 30 வருடங்களுக்குப் பிறகு இதுவரை மாறாமல் இருக்கும் அவரது குழுவுடன் மீண்டும் இணைந்து பணியாற்றி இருக்கிறேன். அது எவ்வளவு பெரிய ஒரு ஆசீர்வாதம். அது எனக்கு கிடைத்திருக்கிறது. மறுபடியும் இதுபோன்ற ஒரு அற்புதமான படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்து இருக்கிறார்கள். சின்ன படம், பெரிய படம் என்பதைவிட நல்ல படம் என்று சொல்லலாம். இது ஒரு அழகான கருத்துள்ள, இன்றைக்கு இருக்கக்கூடிய, பெற்றோர்களுக்கு தேவையான ஒரு படம். இந்தப் படத்தை வெளியிடும் பிளாக் பஸ்டர் விநியோக நிறுவனத்திற்கு நன்றி. இந்த படத்திற்கு நிறைய தியேட்டர்களை கொடுத்து கொஞ்சம் பொறுமையாக காத்திருந்து படம் பிக்கப் ஆகும் வரை படத்தை நீக்காமல் ஒத்துழைக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். முன்பு எல்லாம் படம் வெளியாகி ஒரு வாரம் கழித்து கூட பிக்கப் ஆகி ஓடி இருக்கிறது” என்று கூறினார்.
*தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பேசும்போது,* எனக்கும் இது ஒரு குடும்ப விழா தான். இயக்குநர் கே.எஸ்.அதியமான் என்னுடைய ஊர்க்காரர். தற்போது அவர் இயக்கி வரும் படத்தை நான் தயாரித்து வருகிறேன். பாதி பட வேலைகள் முடிந்து விட்டன. இந்த படத்தில் பிரிவியூ காட்சி திரையிட்ட போதும் சரி, இந்த நிகழ்வின் போதும் சரி.. நடிகை தேவயானி தனது சொந்த விசேஷம் போல அனைவரையும் வரவேற்று உபசரிப்பதை பார்க்க முடிந்தது. இன்றைக்கு இருக்கும் கதாநாயகிகள், தாங்கள் நடித்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிக்கே வர தயங்குகிறார்கள். திரையரங்குகளில் படம் பிக்கப் ஆகும் வரை தூக்காமல் ஓட்டுவது நம் கையில் இல்லை. அதற்கு வேண்டுமென்றால் நாம் டைம் டிராவல் செய்து 90 க்கு தான் செல்ல வேண்டும். இன்று அது தியேட்டர்காரர்களின் கையில் தான் இருக்கிறது. ஒரு காட்சி நன்றாக ஓடவில்லை என்றாலே அடுத்த காட்சியில் படத்தை மாற்றி விடுகிறார்கள்” என்று கூறினார்.
*பெப்சி தலைவரும் இயக்குநருமான ஆர்.கே செல்வமணி பேசும்போது,* இந்த படத்தை இன்னும் நான் பார்க்கவில்லை. ஆனால் பாடலை பார்க்கும்போது மகிழ்ச்சியாக கண்களுக்கு இனிமையாக இருந்தது. அதற்கு ஒளிப்பதிவாளருக்கு தான் முதல் வாழ்த்து சொல்ல வேண்டும். நடிகர் விஜயத்தை பார்க்கும்போது கார்த்திகை பார்த்தது போல இருந்தது. தமிழ் சினிமாவில் நல்ல ஒரு ஹீரோவாக வலம் வருவார். எப்போதும் இதேபோல பணிவாகவும் இருக்க வேண்டும். நல்ல படம் வர வேண்டும் என்று சொல்கிறோம். நல்ல படத்தை ஓட வைத்தால் தானே அடுத்து இன்னொரு நல்ல படம் வரும். சமூகத்திற்கு தேவையான கருத்தம்சம் கொண்ட ஒரு படத்தை தான் கொடுத்திருக்கிறார்கள். இதை ஓட வைத்தால் தான் அடுத்தவர்கள் நல்ல படம் எடுக்க முன்வருவார்கள். இப்போதைய சூழலில் தியேட்டர்கள் மினி ரெஸ்டாரன்ட் ஆகிவிட்டன. டிக்கெட் கட்டணத்தை விட அவர்களுக்கு கேண்டீன் வியாபாரம் தான் மிகப்பெரியதாக தெரிகிறது. அதனாலேயே அதற்கேற்ற மாதிரியான படங்களை தயாரிக்க வேண்டிய சூழல் இன்று இருக்கிறது உற்பத்திக்கான விலையை தாங்களே நிர்ணயிக்க முடியாத சூழலில் தமிழ்நாட்டில் இருக்கும் இரண்டு பேர் யாரென்றால் ஒருவர் விவசாயி.. இன்னொருவர் சினிமா தயாரிப்பாளர்.. இருவருமே தமிழக மக்களை வாழவைக்கிற, சிந்திக்க வைக்கின்ற, சிரிக்க வைக்கின்ற இடத்தில் இருக்கிறார்கள். ஆனால் இவர்கள் இருவரின் நிலைமை படுமோசமாக இருக்கிறது. தயாரிப்பாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஒரு சக்தியாக மாறினால் மட்டுமே தங்களது பொருளுக்கு தாங்களே விலையை நிர்ணயிக்க முடியும்.
நானும் ரோஜாவும் திருமணம் செய்தது, குஷ்பூவும் சுந்தர்சியும் திருமணம் செய்தது எல்லாம் பரபரப்பு செய்தி ஆனால் தேவயானி திருமணம் செய்தது மற்றவர்களுக்கெல்லாம் ஷாக்கிங் ஆன செய்தி. உங்கள் திருமணத்திற்கு பிறகான தேவயானியின் வாழ்க்கை திரையுலகில் இருப்பவர்களுக்கு மட்டுமல்ல தமிழ்நாட்டில் இருக்கும் பெண்களுக்கும் ஒரு பாடம் தான். அந்த கலாச்சாரத்தை இந்த படத்தில் மிக அழகாக எடுத்துக் காட்டி இருக்கிறார்கள். கத்திரி வெயிலுக்கு எப்படி குடை சிறப்பாக இருக்குமோ, அதுபோல கத்திரி வெயிலாக காய்ந்து கிடக்கும் இந்த தமிழ் சினிமாவிற்கு இந்த நிழற்குடை படம் ஒரு சிறப்பாக அமையும். அண்ணன் சீமான் அவர்கள் கருப்பாக இருந்தார்கள். சிவப்பாக இருந்தார்கள்.. இப்போது எந்த வண்ணமும் இல்லாமல் தூய்மையாக இருக்கிறார்கள். எப்போதும் இதேபோல இருக்க வேண்டும்” என்று பேசினார்.