தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னையின் மழைநீர் வடிகால் கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில் ஒக்கியம் மடுவு, நாராயணபுரம் ஏரி, கீழ்க்கட்டளை ஏரியின் உபரிநீர் கால்வாய்உள்ளிட்டவற்றில் மேற்கொள்ளப்பட்டுவரும் சீரமைப்பு பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர்  எதிர்பாராத பெரும் மழையினால் வெள்ளம் ஏற்பட்டாலும், சென்னையில் நீர்தேங்காமல் இருப்பதற்காக நீர்வளத்துறை, சென்னை பெருநகர மாநகராட்சி ஆகியவற்றின் கட்டுப்பாட்டில் உள்ள கால்வாய்களில் ஆழப்படுத்துதல், அகலப்படுத்துதல், கான்கிரீட் சுவருடன் கூடிய மூடு கால்வாய்அமைத்தல், மழைநீர் கால்வாய்கள் அமைத்தல், கால்வாய்கள் கடலுடன் சேரும்பகுதிகளில் தூர்வாருதல் உள்ளிட்ட பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றார். இதன் காரணமாக கடந்த ஆண்டுகளில் ஒரு சில மணி நேரங்களில் அதிக அளவில்மழை பெய்தும், சில மணி நேரங்களிலேயே வெள்ள நீர் வடிந்து உடனடியாகபோக்குவரத்து நடைபெறும் நிலை உருவானது. இதன் தொடர்ச்சியாக தற்காலத்தில் நாடுமுழுவதும் ஏற்படும் மேகவெடிப்பு உள்ளிட்ட பெருமழை பெய்தாலும் எதிர்கொள்ளும்வகையில் சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை வெள்ள முன்னேற்பாட்டு பணிகள்தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

 தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் ஒக்கியம் மடுவு கால்வாயில் 27.00 கோடி ரூபாய் மதிப்பீட்டில்சீரமைக்கும் பணிகள் மேற்கொள்வதன் ஒரு பகுதியாக  கண்ணகி நகர் பகுதியில்நடைபெறும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து, சென்னை ராஜீவ் காந்தி சாலையில்  காரப்பாக்கம் பாலம் பகுதிஒக்கியம் மடுவு கால்வாயில் மழைநீர் தடையின்றி செல்ல மேற்கொள்ளப்பட்டுவரும்வெள்ளத் தடுப்பு நடவடிக்கை பணிகளையும், 44 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நாராயணபுரம்ஏரியில் வெள்ள ஒழுங்கி மற்றும் கான்கிரீட் மூடு கால்வாய் கட்டும் பணிகள் நடைபெற்றுவருவதையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர், 59.12 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கீழ்க்கட்டளை ஏரியின் உபரிநீர்கால்வாய் புனரமைக்கும்  பணிகள் நடைபெற்று வருவதையும், சுண்ணாம்பு குளத்தூர் அம்பேத்கார் சாலைப் பகுதியில் கீழ்க்கட்டளை ஏரியின் உபரிநீர் கால்வாயில் தூர்வாரும்பணிகள் நடைபெற்று வருவதை  நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

 தென் சென்னை பகுதிகளிலிருந்து சேகரமாகும் மழைநீர் எளிதாக கடலில்கடந்திடும் வகையில் சோழிங்கநல்லூர் குடிமியாண்டி தோப்புச் சலையில் எல்காட்அருகே 14.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுவரும் உயர் மட்ட பாலத்தின்கட்டுமானப் பணிகளையும் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் நேரில்பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வுகளின் போது, சீரமைப்பு பணிகளை வடகிழக்கு பருவமழைக்குமுன்னதாக முடிவடையும் வகையில் விரைவாகவும், தரமாகவும் மேற்கொள்ளுமாறும், பணிகளை உயர் அலுவலர்கள் தொடர் ஆய்வு மேற்கொண்டு குறிப்பிட்ட காலத்தில்முடிவடைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாண்புமிகு தமிழ்நாடு துணைமுதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தினார்.

 இந்நிகழ்ச்சியில்  மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைஅமைச்சர் மா. சுப்பிரமணியன், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர். பிரியா, சட்டமன்ற உறுப்பினர் எஸ்.அரவிந்த் ரமேஷ், சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பிரதீப் யாதவ், இ.ஆ.ப., துணைமேயர் மு. மகேஷ் குமார்,  மாநகராட்சி ஆணையர் ஜெ. குமரகுருபரன், இ.ஆ.ப., நீர்வளத்துறை தலைமைப் பொறியாளர் (சென்னை மண்டலம்) சி. பொதுப்பணித் திலகம், மாமன்ற உறுப்பினர்கள் அரசு உயர் அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

 இந்நிகழ்வில் மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு. மா. சுப்பிரமணியன், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் திருமதி ஆர். பிரியா, சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.அரவிந்த் ரமேஷ், சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு. பிரதீப் யாதவ், இ.ஆ.ப., துணை மேயர் திரு.மு. மகேஷ் குமார்,  மாநகராட்சி ஆணையர் திரு. ஜெ. குமரகுருபரன், இ.ஆ.ப., நீர்வளத்துறை தலைமைப் பொறியாளர் (சென்னை மண்டலம்) சி. பொதுப்பணித்திலகம், மாமன்ற உறுப்பினர்கள் அரசு உயர் அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள்கலந்து கொண்டனர்.