எம்.ஆர்.பி கோவிட் செவிலியர்களுக்கு மீண்டும் பணி வழங்கிய  தமிழ்நாடு அரசுக்கு நெஞ்சார்ந்த  நன்றி. – டாக்டர் ரவீந்திரநாத்

பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்களுக்கு பணிநிரந்தரம் கோரி  வரும் திங்களன்று (19.02.2024) சென்னையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர்கள்,மருத்துவப் பணியாளர்களை நியமிக்க வேண்டும்

மக்கள் நல்வாழ்வுத்துறைக்கான நிதி ஒதுக்கீட்டை ஒன்றிய மாநில அரசுகள் அதிகரிக்க வேண்டும்

இதுகுறித்து இவ்வமைப்புகளின் சார்பில் இன்று ( 27.02.2024) சென்னையில் ஊடகவியலாளர் சந்திப்பில்விடப்பட்டுள்ள ஊடகங்களுக்கான செய்தி

# கொரோனா பாதிப்பு உச்சக் கட்டத்தில் இருந்த பொழுது ,

எம் .ஆர் .பி தேர்வில் வெற்றி பெற்று பணி நியமனத்திற்காக காத்திருந்த ,3500 க்கும் மேற்பட்ட செவிலியர்கள்கடந்த ஆட்சி காலத்தில்  ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டனர் . கொரோனா பாதிப்புமுடிவடைந்த உடன் அவர்கள் அனைவரும் பணிநீக்கம் செய்யப்பட்டனர்தற்பொழுது அவர்களுக்கு தமிழ்நாடுஅரசு,மீண்டும் பணி வழங்கியுள்ளது. இது வரவேற்கத்தக்கது. பாராட்டத்தக்கது .தமிழ்நாடு அரசுக்கு மனமார்ந்தநன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்

# ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை 

தமிழ் வழியில் படித்த மருத்துவர்களுக்கு அரசு வேலை வாய்ப்புகளில்  20% இட ஒதுக்கீடு வழங்க உரிய சட்டத்திருத்தத்தை உடனடியாகச் செய்ய வேண்டும்.அதன் அடிப்படையில் தற்போது  MRB  மூலம் நடைபெற்று வரும்பணிநியமனங்களிலேயே இவ்வொதுக்கீட்டை  நடைமுறைப் படுத்த முயற்சிக்க வேண்டும்.

அடுத்து வரும் MRB மற்றும் TNPSC தேர்வுகளிலும் தமிழ் வழியில் பட்டப் படிப்பு இல்லாத 

MBBS,BDS,BVSc  போன்ற படிப்புகளை படித்தவர்களுக்கு ,அவர்கள் முதலாம் வகுப்பில் இருந்து 12 ஆம்வகுப்பு வரை தமிழ் வழியில் படித்திருந்தால்அவர்களுக்கு அரசு வேலை வாய்ப்புகளில் 20% இட ஒதுக்கீடுவழங்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசு  எடுத்திட வேண்டும்.

# நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர்கள், செவிலியர்கள் , ரத்த மற்றும் மருத்துவ பரிசோதனை  நுட்புனர்கள் , எக்ஸ்ரே, இசிஜி, டாயாலிசிஸ் டெக்னீசியன்கள் மருந்தாளுநர்கள் உள்ளிட்ட மருத்துவத் துறைபணியாளர்களை , புதிய பணியிடங்களை உருவாக்கி நியமிக்க வேண்டும்.ஏற்கனவே உள்ளகாலிப்‌பணியிடங்களையும் நிரப்பிட வேண்டும்

# அரசாணை எண் 354 மறுசீரமைப்பு செய்து

அரசு மருத்துவர்களின் நீண்ட கால ஊதிய உயர்வு,கால முறை பதவி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளைஉடனடியாக நிறைவேற்ற வேண்டும்

# அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் RCH தூய்மை பணியாளர்கள் வெறும்‌ 1500 ரூபாய் மாததொகுப்பூதியமாக பத்தாண்டுகளுக்கும் மேலாக பெற்று வந்தனர்.அவர்களில் 947 பேருக்கு முதல் கட்டமாக , பல்நோக்கு மருத்துவப் பணியாளர்களாக பணிநியமனம் செய்து, தினக்கூலி அடிப்படையில் ஊதிய உயர்வுவழங்க  அரசாணை  கடந்த ஆண்டு தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்டது.இது பாராட்டத்தக்கது.எனினும், அவ்வாணையின் படி , பணிநியமனப் பட்டியலில் இடம் பெற்றுள்ள  100 பேருக்கு இன்னும்

பணி நியமன ஆணை‌கள் வழங்கப் படவில்லை.

அவர்களுக்கு உடனடியாக பணிநியமன ஆணைகளை வழங்கிட வேண்டும்.

மீதமுள்ள 1000 க்கும் மேற்பட்ட RCH தூய்மைப் பணியாளர்களுக்கும் தினக்கூலி அடிப்படையில் பணி,பல்நோக்கு மருத்துவப் பணியாளர்களாக பணி நியமன ஆணை வழங்கிட வேண்டும்.

60 வயதை அடைந்தவர்களுக்கு, பணியிலிருந்து விலகும் பொழுது சிறப்பு உதவித் தொகை வழங்க வேண்டும்

#  2013 ஆம் ஆண்டு முதல் தமிழக அரசு மருத்துவமனைகளில் பணிபுரிந்து வரும் , 2500 க்கும் மேற்பட்டதமிழ்நாடு அரசு மருத்துவமனை பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்களுக்கு, பணிநிரந்தரம் வழங்கவேண்டும். கடந்த ஆட்சிக் காலத்தில்  திமுக,பணி நிரந்தரக் கோரிக்கையை  சட்டமன்றத்தில் முன்வைத்ததுஅக்கோரிக்கையை ஏற்று,    பணி நிரந்தரம் வழங்கப்படும் என அதிமுக அரசு சட்டமன்றத்தில் 

உறுதி அளித்தது. அண்மையில்உயர் நீதிமன்றம் பல தீர்ப்புகளில்  அவர்களுக்கு பணி நிரந்தரம் வழங்கிடவேண்டும் என்றும் கூறியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

பத்தாண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிபவர்களுக்கு பணி நிரந்தரம்வழங்கப்படும்.மருத்துவத் துறையில் பணிபுரியும்  தற்காலிக பணியாளர்களுக்கு பணி நிரந்தரம் வழங்கப்படும்என்றுதிமுக வின் தேர்தல் அறிக்கையிலும் கூறப்பட்டுள்ளதுஅதன் அடிப்படையில்தமிழ்நாடு அரசுமருத்துவமனைகளில் பணிபுரியும் பல்நோக்கு மருத்துவமனை  பணியாளர்களுக்கும், பணி நிரந்தரம் வழங்கிடவேண்டும் . இக்கோரிக்கையை வலியுறுத்தி , வரும் திங்களன்று (19.02.2024) காலை 10.30 மணி அளவில்,சென்னை மாவட்ட ஆட்சியரகம் அருகில்  , கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும்

# ஆரம்ப சுகாதார நிலையங்களில்  எச்ஐவி/ எய்ட்ஸ் தடுப்புப் பணியில் ஈடுபட்டுவரும்லேப் டெக்னீசியன்கள்மற்றும் ஆற்றுப்படுத்துநர்களுக்கு

(Councellors)

ஊதிய உயர்வு வழங்கப்படாமல் உள்ளது.

அவர்களுக்கு உடனடியாக ஊதிய உயர்வு வழங்கிட வேண்டும். தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மையம்(TANSAC) மூலம் பத்தாண்டுகளுக்கும் மேலாக பணி புரிந்துவருபவர்களுக்கு பணி நிரந்தரம் வழங்கிடவேண்டும்

# மக்கள் நல்வாழ்வுத்துறைக்கான நிதி ஒதுக்கீட்டை ஒன்றிய மாநில அரசுகள் , மொத்த உள்நாட்டுஉற்பத்தியில் ( GDP ) 5% அளவிற்கு அதிகரிக்க வேண்டும்

இன்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் ,தமிழ்நாடு மருத்துவத்துறை பணியாளர்கள் கூட்டமைப்பின் மாநிலப்பொதுச் செயலாளர்  டாக்டர் .ஆர்.சாந்தி, பாராமெடிக்கல் லேப் கல்வி மற்றும் நலச் சங்கத்தின் அகில இந்தியதுணைத் தலைவர் பி.காளிதாசன்,மாநில துணைச் செயலாளர் எஸ்.ஆறுமுகம், எம்.ஆர்.பி கோவிட் செவிலியர்சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.ராஜேஸ், துணைத் தலைவர் ஜி.உதயக்குமார்,.பிரபுபல்நோக்குமருத்துவமனை பணியாளர்கள் சங்க நிர்வாகிகள் எம். சங்கர், சி.மகேஸ்வரி, டி.ஆறுமுகம், தமிழ்நாடு  எய்ட்ஸ்கட்டுப்பாட்டுப் பணியாளர் சங்கத்தின் நிர்வாகி D.R.தேன்மொழி  உள்ளிட்டோர் உடன் இருந்தனர்