“ஆண் பாவம் பொல்லாதது” திரைப்படம் அக்.31ல் திரைக்கு வருகிறது

ட்ரம்ஸ்டிக் புரடெக்‌ஷன்  தயாரிப்பில், கலையரசன் தங்கவேல் இயக்கத்தில், ஜோ’ ரியோ ராஜ் – மாளவிகா மனோஜ் ஜோடி மீண்டும் இணைந்து நடிக்க, குடும்ப பொழுதுபோக்கு படமாக உருவாகியுள்ள படம் `ஆண் பாவம் பொல்லாதது’. இப்படம் வரும் அக்டோபர் 31 ஆம் தேதி  திரையரங்கில் வெளியாகிறது. இப்படத்தின் முன் வெளியீட்டு நிகழ்வில்  இயக்குநர் கலையரசன் தங்கவேல் பேசியதாவது: “இந்தப்படத்தைக் கதையாக ஒரு மாதத்தில் எழுதியவர் சிவா, அவர் இப்போது வேறொரு அற்புதமான படமெடுத்து வெளியீடுக்காக காத்திருக்கிறார். அவரே இந்தப்படத்தையும் எடுத்திருக்கலாம். ஆனால் கலை இதைச் செய்யட்டும் என விட்டுக்கொடுத்த சிவக்குமார் முருகேசன் சாருக்கு நன்றி. எங்களுக்கு இருக்கும் ஒரே ஆட்டோ, ரியோ அண்ணன் தான். அவரை நாங்கள் விடமாட்டோம், அவர் கதாநாயகனாக மட்டும் அல்ல, அவர் ஒரு துணை இயக்குநர் போல தான் இருப்பார். அவரால் தான் எங்கள் குழுவில் நாலு பேர் இயக்குநராக இருக்கிறோம். சக்தி கதாபாத்திரம் கதாநாயகனுக்கு  சமமான பாத்திரம்.  நிறைய வசனம்  இருக்கிறது.  மாளவிகா நடிப்பாரா ?  என ஆய்வு செய்தோம். ஆனால் அப்போதே அவர் தான் என முடிவு செய்து விட்டோம். மிகச் சிறப்பாக நடித்துள்ளார்.******

34 நாள்ல ஷூட் முடியக் காரணம் மாதேஷ் அண்ணன் தான் அவருக்கு நன்றி. சித்துக்குமார் மிகச்சிறந்த இசையைத் தந்துள்ளார். இவ்வளவு கூலான புரடியூசர் பார்த்ததே இல்லை. படத்திற்கு பெரும் ஆதரவாக இருந்தார். பெரும் உழைப்பைத் தந்த  என் தொழில் நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. இப்படம் ஒரு அழகான ஃபேமிலி என்டர்டெயினர் அனைவருக்கும் பிடிக்கும், அனைவரும் பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி.

நடிகர் ரியோ ராஜ் பேசியதாவது: இங்கு வந்து வாழ்த்திய வசந்த் சார், பொன்ராம் சார், மிஷ்கின் சாருக்கு நன்றி. ஆண் பாவம் பொல்லாதது நன்றாக வர Drumsticks Productions க்கு நன்றி. ஒரு புரடியூசர் இருந்தாலே பிரச்சனை என்பார்கள் ஆனால் இந்த நிறுவனத்தில் நாலு பேர். ஆனால் எல்லோருமே நண்பர்கள் போலத் தான் இருந்தார்கள். எங்களுடன் ஜாலியாக இருந்தார்கள். அவர்களால் தான் இந்தப்படம் இவ்வளவு நன்றாக வந்துள்ளது. சக்திவேல் சாரை படம் முடித்துத் தான் பார்த்தேன். விவேக் சார் தான் முழுதாக படத்தைப் பார்த்துக்கொண்டார். சிவா தான் இந்த படத்தை ஆரம்பித்தார்.  ஆனால் பிள்ளையார் சுழி போட்டது ஆர்ஜே விக்னேஷ் காந்த். சிவா எழுதியதை, கலையரசன் தங்கவேல் மிக அட்டகாசமான படமாக எடுத்துள்ளார். நெஞ்சமுண்டு நேர்மையுண்டு படத்திலிருந்து மூன்றாவது அஸிஸ்டெண்ட் டைரக்டர் படம் செய்துள்ளார். அதைப் பெருமையாகச் சொல்வேன். சித்து குமார் எங்களின் பலம். உருகி உருகி பாடல் இப்போது எங்களின் அடையாளமாகவே ஆகிவிட்டது. சித்து குமார் இன்னும் பெரிய உயரம் செல்ல வேண்டும். அது இந்தப்படத்திலிருந்து நடக்கும். மாதேஷ் அண்ணன் தான்  எங்கள் பாய்ஸ் மங்களம் சார். இந்த படத்தின் அழகான விஷுவல்ஸ்க்கு அவர் தான் காரணம் நன்றி. கேஜி வருண் இந்தப்பட எடிட்டர். அவர் ஒரு ஹீரோ,  இயக்குநர் கூட எனக்கு மிகவும் பிடித்தவர்.  நன்றாக எடிட் செய்துள்ளார். இந்தப்படத்தை ரிலீஸ் செய்யும் AGS  சினிமாஸுக்கு நன்றி. ஆர் ஜே விக்னேஷ் காந்த் முதல்முறையாக நடித்திருக்கிறார். உண்மையிலேயே சூப்பராக நடித்திருக்கிறார். மாளவிகா மனோஜ்  இதில் டயலாக் அதிகம் என்பதால் ஆடிசன் செய்தோம். சூப்பராக செய்துள்ளார்.  அவர் டிசிப்ளினான ஆக்டர்.  ஆண் பாவம் ஒரு குடும்ப வாழ்க்கைக்குள் சந்தோசமாக இருக்க என்ன பண்ணனும் என்பதை,  ஒரு அழகான ஃபேமிலி என்டர்டெயினராக சொல்லியுள்ளோம்.  அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.