துல்கர் சல்மான் நடித்துவரும் “ஆகாசம்லோ ஒக தாரா” திரைப்படத்தில் நடிகை ஸ்ருதி ஹாசன் அறிமுகமாகியுள்ளார்.கீதா ஆர்ட்ஸ், ஸ்ப்னா சினிமா வழங்க, சந்தீப் குன்னம் , ரம்யா குன்னம் தயாரிப்பில் உருவாகும் இந்த படம், விரைவில. வெளியாகவுள்ளது. நடிகர் துல்கர் சல்மான், அடுத்ததாக “ஆகாசம்லோ ஒக தாரா” படத்தில் நடித்து வருகிறார் . பவன் சடினேனி இப்படத்தை இயக்குகிறார் .இந்த திரைப்படத்தை, சந்தீப் குன்னம் மற்றும் ரம்யா குன்னம் தயாரிக்கின்றனர். நடிகை சாத்விகா வீரவள்ளி துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடித்துள்ளார். சமீப காலமாக தேர்ந்தெடுத்த படைப்புகளில் மட்டுமே நடிக்கும் நடிகை ஸ்ருதி ஹாசன், ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் இந்தப் படத்தில் இணைந்துள்ளார்.*******
அவரது பிறந்தநாளை முன்னிட்டு, அவரின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த திரைப்படத்தின் கதையோட்டத்தில் ஸ்ருதி ஹாசனின் கதாபாத்திரம் ,கதையின் திருப்புமுனையாக முக்கிய பங்கு வகிக்கவுள்ளது. அவர் இப்படத்தில் இணைந்துள்ளது, கதையை ஒரு புதிய கட்டத்திற்கு கொண்டு செல்லும். அவரது தோற்றமே, இந்த டிராமாவுக்கு புதிய பரிமாணத்தையும் கனத்தையும் சேர்க்கும் சக்தியாக அவரை நிலைநிறுத்துகிறது. இந்த திரைப்படத்தின் இசையமைப்பை ஜி.வி. பிரகாஷ் குமார் மேற்கொள்கிறார். ஒளிப்பதிவை சுஜித் சாரங், தயாரிப்பு வடிவமைப்பை ஸ்வேதா சாபு சிரில் கவனிக்கின்றனர். தற்போது தயாரிப்பின் இறுதிக்கட்டத்தில் இருக்கும் இந்தப் படம், தெலுங்கு, தமிழ், ஹிந்தி மற்றும் மலையாள மொழிகளில் பான்-இந்தியா அளவில் வெளியாக தயாராகி வருகிறது.

