கோமளா ஹரி, ஹரி பாஸ்கரன் தயாரிப்பில் ஜோஸ்வா சேதுராமன் இயக்கத்தில் லிஜோஸ்மோல் ஜோஸ், ஹரிகிருஷ்ணன், லோஸ்லியோமரியநேசன், ராஜீவ்காந்தி, தரணி, வைரபாலன், சுதேஷ் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “ஜெண்டில் உமன்”. ஹரிகிருஷ்ணன் ஒரு காப்பீட்டு கழகத்தின் முகவராக பணியாறுகிறார். மூன்றுமாதங்களுக்கு முன்பு கிராமத்துப் பெண்ணான லிஜோஸ்மோல் ஜோஸ்சியை திருமணம் செய்து கொள்கிறார். இந்த புதுமணத் தம்பதிகள் மிகவும் சந்தோஷ்மாக வாழ்க்கையை தொடங்குகிறார்கள். போகப்போக கணவரின் நடவடிக்கைகளில் பல மாறுதல்களை மனைவி பார்க்கிறார். முடிவில் தனது கணவர் பெண்பித்து பிடித்தவர் என்பது மனைவிக்கு தெரியவருகிறது. ஹரிகிருஷ்ணன் திருமணத்திற்கு முன்பே வேரொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பில் இருந்திருக்கிறார். கள்ளத் தொடர்பில் இருந்த பெண், தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றிவிட்டு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டுவிட்டார் என்று காவல் நிலையத்தில் புகார் அளிக்கிறார். இதற்கிடையில் ஏமாற்றிய ஹரிகிருஷ்ணன் கொலை செய்யப்படுகிறார். அதன்பிறகும் வேறு ஒரு கொலையும் நடக்கிறது. இந்த இரு கொலைகளையும் செய்தது யார்?. எதற்காக கொலை செய்யப்பட்டார்கள்?. கள்ளத் தொடர்பில் இருந்த பெண் கொடுத்த புகார் மீதும் கொலை வழக்கின் மீதும் காவல்த்துறையினர் கண்டுபிடிக்க எடுத்த நடவடிக்கைகள் என்ன? என்பதுதான் கதை. செய்தித்தாள்களில் அன்றாடம் நடக்கும் உண்மையான கொலைகளை ஒரு படமாக தயாரித்துள்ளார்கள். கதை உண்மைக்கு மிக நெருக்கமாக இருப்பதால் காட்சிகளை ரசிக்க முடிகிறது. படத்தை கைதூக்கி நிறுத்துவது வசனங்கள்தான். ஒவ்வொரு காட்சிகளையும் நிதானமாகவும் அதரடி திருப்பங்களுடனும் நகர்த்தியிருக்கிறார் இயக்குநர் ஜோஸ்வா சேதுராமன். அடுத்த காட்சியை ஆவலுடன் எதிர்பார்க்கும் அளவுக்கு படத்தை சாமர்த்தியமாக நகர்த்தியிருக்கிறார்கள். விசாரணையின்போது சில காவலர்கள் நடத்தும் சட்டத்துக்கு எதிரான அத்துமீறல்களையும் படத்தில் இயக்குநர் பதிவு செய்திருப்பது பாராட்டுதலுக்குறியது. பெண்களுக்கும் துப்பறிவு நாவல் படிக்கும் ரசிகர்களுக்கும் இப்படம் ஒரு வரப்பிரசாதம்.
“ஜெண்டில் உமன்” திரைப்பட விமர்சனம்
